பாண்டியாவுக்கு தனது பாணியில் அழகாக பதிலடி கொடுத்த ஜாஹீர் கான் – விவரம் இதோ

Zaheer

ஜாஹீர் கான் நேற்று முன்தினம் அவர் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்தினை தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா தன்னுடைய பங்கிற்கு டுவிட்டரில் ஜாஹீர் கானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

Zaheer

ஆனால் அதனை கொஞ்சம் கிண்டலாக பாண்டியா செய்துள்ளார். அது யாதெனில் ஜாஹீர் கான் பந்துவீச்சில் அவர் அடித்த சிக்ஸர் வீடியோ ஒன்றினை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் இந்த ஷாட்டை போலவே அதிரடியாக உங்களது பிறந்தநாளை கொண்டாடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

பாண்டியாவின் என்ற பதிவிற்கு பதிலடி தரும் விதமாக ஜாகிர்கான் தற்போது அவரது பதிவிற்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் ஜாகிர் கான் குறிப்பிட்டதாவது : உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி என்னுடைய பேட்டிங் திறன்கள் உங்கள் அளவிற்கு இருக்காது என்பது உண்மைதான். ஆனால் என்னுடைய பிறந்தநாள் நீங்கள் இந்த போட்டியில் என்னிடமிருந்து எதிர்கொண்ட அடுத்த பந்து போல சிறப்பாக நன்றாகவே இருந்தது என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாண்டியாவின் பதிவிற்கு ஜாஹீர் கான் அளித்த இந்த பதில் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.