இந்திய அணியின் வீரரான இவர் பேட்டிங் செய்யும்போது நான் டிவியை ஆப் பாண்ணாமல் பார்த்துக்கொண்டே இருப்பேன் – பாக் வீரர் பேட்டி

Abbas

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜாகீர் அப்பாஸ் அவரது தலைமுறையில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கியவர். தற்போது யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் இன்றைய கால கட்டத்தில் இந்தத் தலைமுறையில் சிறந்த பேட்ஸ்மேன் யார் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Kohli

இன்றைய தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக கோலி கருதப்படுகிறார் என்றாலும் அவரின் ஆட்டத்தை விட ரோகித் சர்மாவின் ஆட்டம் நுணுக்கத்தை பார்க்கும்போது மிகவும் திருப்தியாக இருக்கிறது என்று கூறினார். மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது : கோலி ஒரு சிறந்த வீரர் தான் ஆனால் ரோகித் சர்மாவின் ஆட்டம் நோக்கம் பார்ப்பதற்கு எனக்கு மன நிறைவைத் தருகிறது.

ரோஹித் ஷாட்டை உருவாக்கும் விதத்தில் ஒரு கலை வெளிப்படுகிறது. கோலியிடம் கூட பார்க்க முடியாத ஒன்றை நான் அவரிடம் பார்க்கிறேன். மேலும் ரோஹித் எப்போது பேட்டிங் செய்ய வந்தாலும் நான் பார்க்க விரும்புகிறேன். அவர் விளையாடும் போது ஒரு நாளும் என் டிவி ஆப் செய்தது கிடையாது.

கோலி இப்போதும் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறார். ஆனால் ரோஹித்தின் மாற்றங்களைப் பார்க்கும்போது எனக்கு அவரே சிறந்த வீரராகத் தெரிகிறார் மேலும் இருவரது ஆட்டத்தை காண்பது என்பது மிகவும் அருமை என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -