எவ்ளோ ரேட் இருந்தாலும் என்னை வாங்குறேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க – யுஸ்வேந்திர சாஹல் வருத்தம்

Chahal
- Advertisement -

இந்தியாவில் தற்போது 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 16 ஐபிஎல் தொடர்களில் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றதாக அணியாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது இருந்து வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவினை பெற்று வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.சி.பி அணியானது தற்போது துவங்கியுள்ள 17-ஆவது ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 4 போட்டிகளில் 1 வெற்றி மற்றும் 3 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தினை பிடித்துள்ளது.

- Advertisement -

மேலும் நட்சத்திர வீரர்கள் இருந்தும் அந்த அணி தோல்வியை சந்தித்து வருவது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த காலத்தில் பெங்களூரு அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சாஹல் தன்னை மீண்டும் தேர்வு செய்யாதது குறித்து தனது வருத்தத்தினை வெளிப்படையாக தெரிவித்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் அவர் கூறியதாவது : ஆர்.சி.பி அணிக்காக 8 ஆண்டுகள் நான் விளையாடி உள்ளேன். ஆனாலும் 2022-ஆம் ஆண்டு என்னை தேர்ந்தெடுக்காததால் நான் மிகவும் கோபம் அடைந்தேன். அதோடு வருத்தமும் அதிகமாக இருந்தது. அந்த ஏலத்திற்கு முன்னதாக என்னிடம் அவர்கள் உங்களை ஏலத்தில் நிச்சயமாக எவ்வளவு தொகையாக இருந்தாலும் வாங்குவோம் என்று உறுதியளித்தனர்.

- Advertisement -

மேலும் இது சாதாரண வாக்குறுதியை அல்ல.. கூடுதல் பணம் கொடுத்தும் உங்களை வாங்குகிறோம் என்று கூறியிருந்தனர். ஆனால் அந்த ஆண்டு என்னை ஏலத்தில் அவர்கள் எடுக்காதது என்னை மிகவும் காயப்படுத்தியது. என்னுடைய ஐபிஎல் பயணத்தை நான் துவங்கியதில் இருந்து பெங்களூர் அணி மீது உண்மையான விசுவாசம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வைத்திருந்தேன்.

இதையும் படிங்க : தோனிக்கு அப்றம் அவர் தான் சிஎஸ்கே அணியின் ஃபினிஷர்.. இளம் இந்திய வீரருக்கு.. நவ்ஜோத் சித்து ஆதரவு

அந்த அணிக்காக நான் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் விளையாடி இருந்தும் அவர்கள் என்னை ஏலம் எடுக்காது வருத்தம் அளித்ததாக சாஹல் கூறியிருந்தார். மேலும் அவரது இந்த பழைய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement