என்னுடைய நிதானம் இங்கிருந்து தான் வந்தது. அதனால் தான் நான் சிறப்பாக செயல்படுகிறேன் – சாஹல் வெளிப்படை

Chahal-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முக்கிய வீரராக விளையாடி வருகிறார். அஸ்வினுக்கு அடுத்து நம்பிக்கையான சுழற்பந்து வீச்சாளராக தற்போது இந்திய அணியில் வலம் வரும் இவர் எந்த ஒரு இக்கட்டான நேரத்தில் பந்துவீச அழைத்தாலும் எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பந்துவீசி தேவையான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு திருப்பம் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக 52 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளையும், 42 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளையும் இவர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2016-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினார்.

அதிலிருந்து கடந்த 4 வருடங்களாக தற்போது முதன்மை பந்துவீச்சாளராக திகழ்கிறார். இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையிலும் இவர் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்வார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவர் கிரிக்கெட் போட்டிகளில் தான் கடைபிடிக்கும் நிதானம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Chahal

சர்வதேச போட்டியின் போது அனைவரும் ஆக்ரோஷமாக தங்களது செயல்பாடுகளை வெளிக்காட்ட இவர் மட்டும் நிதானத்தைக் கடைபிடிக்க தனக்கு உதவும் ஒரு விடயத்தைப் பற்றி தற்போது பகிர்ந்துள்ளார். அதன்படி சாஹல் கூறுகையில்: டெஸ்ட் போட்டிகயில் ஒரு நாள் முழுவதும் நீங்கள் நன்றாக பந்து வீசினாலும் கூட உங்களால் சில நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போகலாம்.

- Advertisement -

ஆனால் அடுத்த நாளும் பந்துவீச வர வேண்டும் ஆகவே நிதானம் என்பது எப்போதும் கிரிக்கெட்டில் மிக அவசியம். அந்த நிதானம் மற்றும் பொறுமையை எனக்கு கற்றுக்கொடுத்தது செஸ் விளையாட்டு தான். செஸ் விளையாட்டில் இந்த நிதானம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. நிதானத்தைக் கடைப்பிடித்தால் பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்குவதை எளிதாக செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

chahal

மேலும் சாஹல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வருவதற்கு முன்பே தேசிய அளவில் செஸ் வீரராக திகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் கோலியின் ஒத்துழைப்போடு இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது முதன்மை பந்து வீச்சாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement