டி20 இந்திய அணியிலும் மறுக்கப்பட்ட வாய்ப்பு. யுஸ்வேந்திர சாஹல் பகிர்ந்த ரியாக்ஷன் – விவரம் இதோ

Chahal
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. இப்படி அவருக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது வருத்தத்தை ஏற்படுத்தியது.

அதோடு இப்படி அவர் தொடர்ச்சியாக இந்திய அணியில் இருந்து நிராகரிக்கப்பட்டு வருவது அவரது கரியரையும் முடிவுக்கு கொண்டு வரலாம் என்று ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 33 வயதாகும் அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நாளை மறுதினம் நவம்பர் 23-ஆம் தேதி துவங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.

ஏனெனில் உலககோப்பை தொடரில் பங்கேற்று விளையாடிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள இவ்வேளையிலாவது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று வெளியான இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை.

- Advertisement -

ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்காதபோதே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த சாஹல் அப்போது வெளியிட்ட பதிவில் : “சூரியன் மீண்டும் உதிக்கும்” என்று பதிவிட்டு இருந்தார். அவரது அந்த பதிவு அப்போதே இணையத்தில் வைரலாகி இருந்தது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய டி20 தொடரில் அதிர்ஷ்டமின்மையால்.. கழற்றி விடப்பட்ட 3 தரமான இந்திய வீரர்கள்

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரிலும் வாய்ப்பு கிடைக்காத அவர் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் சிரிப்பது போன்று இருக்கும் இமோஜியை பதிவிட்டு தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவரது இந்த பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement