இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அக்டோபர் 6-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது.
வருண் சக்ரவர்தியால் வாய்ப்பை இழந்த அனுபவ வீரர் :
இந்த டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் முதன்மை வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த அணியில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் அனைவரது மத்தியிலும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. குறிப்பாக தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய டி20 அணிக்காக தேர்வாகியுள்ளார். கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் வருண் சக்கரவர்த்தியை அருகில் இருந்து அவரது திறனை பார்த்ததாலே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்குள் வந்ததால் அனுபவ வீரரான யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் இந்திய அணியில் நிராகரிக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்திய அணிக்காக ஏற்கனவே அறிமுகமாகி பல ஆண்டுகள் விளையாடி நல்ல அனுபவம் கொண்ட சாஹல் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
ஆனாலும் அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காத அவருக்கு இந்த வங்கதேச தொடரிலாவது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது யுஸ்வேந்திர சாஹலை நிராகரித்துள்ள கம்பீர் வருண் சக்கரவர்த்தியை அணிக்குள் கொண்டு வந்துள்ளதார்.
இதையும் படிங்க : 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு திரும்ப காரணமே இவர்தான் – விவரம் இதோ
இதன் காரணமாக சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போயுள்ளது. அதே போன்று மேலும் உள்ள இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கான இடம் இளம் வீரர்களான ரவி பிஷ்னாய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



