IPL 2023 : முழு மூச்சுடன் போராடிய சஹால் – ட்வயன் ப்ராவோவின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

Chahal Bravo
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 52வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஹைதராபாத் தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 35 (18) ஜோஸ் பட்லர் 95 (59) கேப்டன் சஞ்சு சாம்சன் 66* (38) என களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக பெரிய ரன்களை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 215 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு அன்மோல்ப்ரீத் சிங் 33 (25) அபிஷேக் சர்மா 55 (34) ராகுல் திரிபாதி 47 (29) ஹென்றிச் க்ளாஸென் 26 (12) என டாப் 4 பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி நல்ல ரன்களை எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதே போல மிடில் ஆர்டரில் கேப்டன் மார்க்ரம் 6 (5) ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட அழுத்தத்தை குல்தீப் யாதவ் வீசிய 19வது ஓவரில் 6, 6, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு 25 (7) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

சாதனை சமன்:
இறுதியில் அப்துல் சமத் அதிரடியாக விளையாடியும் கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது சந்திப் சர்மா அவுட்டாக்கினார். ஆனால் அதை நோ-பாலாக வீசிய காரணத்தால் கடைசியில் ஃப்ரீ ஹிட்டில் சிக்சர் அடித்த அவர் 17* (7) ரன்கள் குவித்து ஹைதெராபாத் முதல் முறையாக 200+ இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைக்க உதவினார். அதனால் பந்து வீச்சில் இதர வீரர்களை காட்டிலும் 4 ஓவரில் வெறும் 29 ரன்களை 7.25 என்ற குறைவான எக்கனாமியில் கொடுத்து 4 விக்கெட்களை எடுத்து அபாரமாக போராடிய யுஸ்வென்ற சஹால் போராட்டம் வீணானது.

குறிப்பாக டாப் 4 பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியதால் ஹைதராபாத் வெற்றியை நெருங்கிய போது 18வது ஓவரை வீசிய அவர் ராகுல் திரிபாதி மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோரை ஒரே ஓவரில் அவுட்டாக்கி முழு மூச்சுடன் போராடினார். இருப்பினும் அடுத்த ஓவரில் கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி பறித்த வெற்றியை சந்திப் சர்மா இறுதியில் மொத்தமாக பரிசளித்தார். ஆனால் 4 விக்கெட்களை ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட சஹால் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் என்ற டவ்யன் ப்ராவோவின் ஆல் டைம் சாதனை சமன் செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

சொல்லப்போனால் அவரை விட மிகவும் குறைந்த போட்டிகளில் 183 விக்கெட்களை எடுத்து அதை சமன் செய்துள்ள சஹால் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் புதிய சாதனையும் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. யுஸ்வென்ற சஹால் : 183* (142 போட்டிகள்)
2. ட்வயன் ப்ராவோ : 183 (161 போட்டிகள்)
3. பியூஸ் சாவ்லா : 174* (175 போட்டிகள்)
4. அமித் மிஸ்ரா : 172* (160 போட்டிகள்)
5. ரவிச்சந்திரன் அஸ்வின் : 171* (195 போட்டிகள்)

கடந்த 2013இல் மும்பை அணியில் தனது பயணத்தை துவங்கி பெரும்பாலும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் அபாரமாக செயல்பட்டு தொட்டாலே பறக்கும் சின்னசாமி மைதானத்தில் தைரியமாக பந்து வீசி நிறைய விக்கெட்டுகளை எடுத்த சஹால் இந்தியாவுக்காகவும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 2017 முதல் முதன்மை ஸ்பின்னராக விளையாடுகிறார்.

இதையும் படிங்க: SRH vs RR : எல்லாமே ஒரு நொடில மாறிப்போச்சு. கடைசி பந்தில் கிடைத்த வெற்றி குறித்து – எய்டன் மார்க்ரம் பேட்டி

இருப்பினும் 2021 வாக்கில் ஃபார்மை இழந்து தடுமாறியதால் 2021 டி20 உலகக்கோப்பையில் கழற்றி விடப்பட்ட அவர் 2022 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை எடுத்து ஊதா தொப்பியை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதிலிருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்த வருடமும் ராஜஸ்தானின் வெற்றிகளுக்கு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement