சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் குரு இவர்தான்..! பார்த்த சிரிப்பிங்க ..! யார் தெரியுமா..? – புகைப்படம் உள்ளே

raina
Advertisement

இங்கிலாந்து சுற்று பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் டி20 போட்டியில் அபார வெற்றிபெற்றது. நேற்று(ஜூலை 6 ) நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய பேட்ஸ்மேன் ரைனாவிற்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்தது யார் என்று தெரிந்தால் அசந்து போவீர்கள்.
rainasuresh
அது வேறு யாரும் இல்லை இந்திய அணியின் இளம் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் தான். இங்கிலாந்து சுற்று பயணம் செய்துள்ள இந்திய அணியில் யுவேந்திர சாஹல் சிறப்பாக பந்து வீசி வருகிறார். டி20 தொடரின் முதல் போட்டியில் யுவேந்திர சாஹல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து மண்ணில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வெளிநாட்டு இடது கை சூழல் பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் யுவேந்திர சாஹல் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவிற்கு பயிற்சியின் போது பேட்டிங் டிப்ஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை யுவேந்திர சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட யுவேந்திர சாஹலை கலாய்க்கும் வகையில் ரெய்னா ஒரு பதிவை போட்டுள்ளார்.
raina
ரெய்னாவிற்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்ததாக முதலில் தன்து ட்விட்டர் பக்கத்தில் யுவேந்திர சாஹல் பதிவிட்டிருந்தார். அதற்கு ரீ- ட்வீட் செய்த ரெய்னா,’சிக்ஸ் வேண்டும், சிங்கள் வேண்டாம். எனவே உங்கள் பேட்டிங் டிப்ஸிற்கு நன்றி ‘ என்று கூறி யுவேந்திர சாஹலை கலாய்த்துள்ளார்.

Advertisement