இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இதை செய்ஞ்சு காட்டனும்னு தான் பண்ணேன் – யுஸ்வேந்திர சாஹல்

Chahal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 12 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 160 போட்டிகளில் விளையாடி 205 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

கவுண்டி போட்டியில் அசத்தியதன் காரணம் :

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் விளையாடியிருந்தாலும் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது 34 வயதை எட்டியுள்ள அவர் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவது கடினம் என்றாலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தான் விட்ட இடத்தை பிடிக்க அவர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

- Advertisement -

அந்த முயற்சியில் ஒன்றாக தான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் அவர் விளையாடி வந்தார். அதன்படி கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வந்த அவர் அக்டோபர் 11-ஆம் தேதி துவங்க இருக்கும் ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்காக தற்போது நாடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இந்த கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியது குறித்து பேசியுள்ள யுஸ்வேந்திர சாஹல் கூறுகையில் : இங்கிலாந்தின் கவுன்ட் கிரிக்கெட் மிகவும் கடினமான ஒன்று. கடினமான சூழ்நிலையில் எனது சிறப்பான திறமையை வெளிக்காட்ட இந்த தொடர் எனக்கு அற்புதமான ஒரு வாய்ப்பாக அமைந்தது.

- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியா இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அதற்கு முன்னர் என்னுடைய பந்துவீச்சு திறனை நான் நிரூபித்து காட்ட வேண்டும் என்பதற்காகவே தான் இந்த கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி எனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினேன் என யுஸ்வேந்திர சாஹல் கூறினார்.

இதையும் படிங்க : இந்தவொரு ஸ்பெஷல் போதும்.. முகமது ஷமிக்கு பதில் இவர் சரியானவர் என்று சொல்ல – ஆகாஷ் தீப் அசத்தல்

நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் மொத்தமாக அவர் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். எனவே நிச்சயம் இனி வரும் காலங்களில் அவர் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பிடிப்பார் என்றும் நம்பலாம்.

Advertisement