ஓய்விலிலிருந்து மீண்டு வரும் யுவ்ராஜ் சிங். மீண்டும் விளையாடுவது உறுதி – எந்த அணிக்காக தெரியுமா ?

- Advertisement -

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கப்படுபவர். அது மட்டுமின்றி இந்திய அணி வென்ற டி20 உலகக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டு தொடரிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் தொடர் நாயகனாக திகழ்ந்தார். இந்நிலையில் ஓய்வு பெற்ற பிறகு அவர் கனடாவில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தார்.

Yuvraj

- Advertisement -

ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் பி.சி.சி.ஐ யின் அனுமதியோடு வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்கல என்ற காரணத்தின் மூலம் விளையாடிய அவர் அதன் பிறகு எந்த ஒரு விக்கெட் தொடரிலும் இந்தியாவில் கலந்து கொள்ளவில்லை. பிசிசிஐ விதிமுறைப்படி வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்றால் இந்தியாவில் பி.சி.சி.ஐ சார்பில் நடைபெறும் இந்த தொடரில் விளையாட முடியாது. ஆனால் இப்போது அவர் சையது முஷ்டாக் டி20 தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் பஞ்சாப் அணியில் வெளியிட்டுள்ள 30 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் சமீபத்தில் பயிற்சி செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் யுவராஜ் சிங்கின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் பிசிசிஐ விதிமுறைப்படி யுவராஜ்சிங் மீண்டும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாது எனக் கூறப்படுகிறது. ஏனெனில் வெளிநாட்டு தொடரில் விளையாடிய ஒரு இந்திய வீரர் மீண்டும் உள்ளூர் தொடர்களில் விளையாட முடியாது என்பது ஒரு விதிமுறை ஆகும்.

Yuvraj

இருப்பினும் யுவராஜ் சிங்கிற்கு சரியான வழி அனுப்புதல் கிடைக்கவேண்டும் என்றும் அவரை கௌரவிக்கும் விதமாக இந்த சையத் அலி தொடரில் விளையாட அவருக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் பஞ்சாப் அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து இன்னும் பிசிசிஐ எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றாலும் அந்த முடிவு தனக்கு சாதகமாக வரும் எனக் கருதி யுவராஜ்சிங் மொகாலி மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் முஷ்டாக் அலி தொடர் குறித்த தகவலை வெளியிட்ட பிசிசிஐ ஜனவரி 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும் என்றும் இந்த தொடரில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியல் தயார் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது பஞ்சாப் அணி சார்பில் யுவராஜ்சிங் விளையாட இருக்கிறார் என பஞ்சாப் கிரிக்கெட் நிர்வாகம் அவரை அந்தப் பட்டியலில் சேர்த்து வீரர்களில் லிஸ்டை தயார் செய்து வருகிறது.

yuvraj 3

பஞ்சாப் அணியில் அவருடன் இணைந்து மந்தீப் சிங், சந்தீப் சர்மா போன்ற வீரர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த தொடரில் ஓய்வுபெற்ற இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா உத்தரப்பிரதேச அணி சார்பாக கேப்டனாகவும், சூதாட்ட தடையில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரளா அணி சார்பாகவும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement