அதிகமாக ஆடினால் இப்படித்தான் ஆகும் இந்திய வீரர்களை எச்சரித்த – யுவராஜ் சிங்

Yuvraj-Singh

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை எளிதாக சேஸிங் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த விரட்டல் மீண்டும் இந்திய அணியின் பலத்தை காட்டியது என்றே கூறலாம்.

kohli 3

இதனால் இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் விடுத்துள்ளார். அதன்படி அவர் குறிப்பிட்டதாவது : இந்திய அணியின் பீல்டிங் இன்று மிக மோசமாக இருந்தது இளம் வீரர்கள் பந்தை கணிக்கத் தவறினர். அதிக போட்டிகளில் ஆடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறதா ? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

தனை கண்ட நெட்டிசன்கள் இரவு நேரத்தின் விளக்கொளியில் பந்துகளை கணிப்பதால் தான் அவர்கள் தவற விடுகிறார்கள் அவர்களை குறை கூற வேண்டாம் என்பதுபோல பதில்களை பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் யுவராஜ் கூறியது போன்று பீல்டிங் மோசமாகவே இருந்தது. முதல் போட்டியில் ரோகித் 2 கேட்ச், சுந்தர் 2 கேட்ச், கோலி மற்றும் ராகுல் என ஆறு கேட்ச்களை இந்திய அணி கோட்டை விட்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாடி அதிக ரன்களை குவித்தது.

ind 1

பீல்டிங் சரியாக இருந்திருந்தால் அந்த கேட்சிகளை பிடித்திருக்கலாம் அதனால் 30 – 40 ரன்கள் வரை குறைந்து இருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்பதும் உண்மைதான். எனவே இனி பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தவும் ரசிகர்கள் தங்களது வேண்டுகோளை இந்திய அணிக்கு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -