டி20 போட்டியின் கேப்டன் விராட் கோலியை நீக்கவேண்டும். காரணம் இதுதான் – யுவராஜ் அதிரடி

Virat-Kholi
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட்க்கும் புதிய கேப்டனாக விராட் கோலி இந்திய அணி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டார். விராட் கோலியின் தலைமையின் கீழ் தற்போது வரை இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

Kohli

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்து யுவராஜ் சிங் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : முன்பெல்லாம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே இருந்தன. அதனால் கேப்டன்களுக்கு அதிக அளவில் நெருக்கடி ஏற்பட்டது இல்லை.

ஆனால் தற்போது டி20 போட்டி அறிமுகம் ஆனதால் கேப்டனுக்கு நெருக்கடி அதிகமாகி உள்ளது. எனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக செயல்பட வைத்து டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம். அதுவே எனது கருத்து ஏனெனில் இந்திய அணியின் கேப்டனாக அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் ரோகித் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடரிலும் அவர் கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார் எனவே டி20 போட்டியில் நெருக்கடியை குறைக்க ரோஹித்தை புதிய கேப்டனாக செயல்பட வைக்கலாம் அவர் நியமிக்கப்படும் போது கோலிக்கு நெருக்கடி குறையும் இருப்பினும் இதுகுறித்து இந்திய நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும் என்று யுவராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement