Yuvraj Singh : ஓய்வுக்கு பிறகு இதனையே செய்ய விரும்புகிறேன் – யுவராஜ் நெகிழ்ச்சி

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கை

Yuvraj
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி அது எனது அதிர்ஷ்டம்.

yuvraj 3

பல போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அதில் நிறைய போட்டிகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் மறக்க முடியாத போட்டிகள் யாவும் இருக்கின்றன. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பையின் இறுதி போட்டி என்னால் மறக்க முடியாத போட்டிகளாகும் என்றும் கூறினார்.

- Advertisement -

மேலும் ஓய்வுக்கு பிறகு நான் என்னுடைய வாழ்வை சமூக சேவை செய்ய அற்பணிக்க உள்ளேன். அதிலும் குறிப்பாக கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய உள்ளேன். நானும் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு திரும்பி வந்தவன் என்பதால் கேன்சர் நோயினால் கஷ்டப்படும் நோயாளிகள் எவ்வளவு துன்பத்தை அனுபவிப்பார்கள் என்பதை என்னால் உணரமுடியும்.

yuvraj 2

இதன் காரணமாக என்னால் முடிந்த அளவு நான் கேன்சர் நோயாளிகளுக்கு உதவிகளை செய்வேன். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் எனது உதவிகளை நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். 25 வருட கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து தற்போது என்னுடைய மீதி வாழ்க்கையை நான் இவர்களுக்காகவே அர்ப்பணிக்க உள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் யுவராஜ் சிங் பேசினார்.

Advertisement