பும்ராவின் ஹாட்ரிக் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அதன்காரணம் இதுதான் – வைரல் ட்வீட்

Yuvraj-Singh
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா 2019 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். அதன்பிறகு தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரிலும் தனது சிறப்பான பவுலிங் மூலம் அசத்தி வருகிறார்.

Bumrah-1

- Advertisement -

இதுவரை 11 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதுமட்டுமின்றி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்நிலையில் இந்த ஹாட்ரிக் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் மூலம் தெரிவித்தார்.

அதில் யுவராஜ்சிங் குறித்து குறிப்பிட்டதாவது : வாழ்த்துக்கள் பும்ரா நீங்கள் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது தகுதியான நபர் என்று அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் எனக்கு பும்ரா ஹாட்ரிக் விழுத்தியது ஆச்சரியமாக தெரியவில்லை. ஏனெனில் அவர் உலகின் நம்பர் ஒன் பவுலர் அந்த திறனை அவர் வெளிப்படுத்துகிறார்.

எனவே பும்ரா ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியது எனக்கு பெரியதாக தெரியவில்லை. அவருடைய திறமையை அவர் வெளிப்படுத்துகிறார் என்று யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement