உனக்கு பேட்டிங்கே தெரியாது என்று விமர்சித்த யுவ்ராஜ் சிங். பதிலடி கொடுத்த இளம் வீரர் – விவரம் இதோ

- Advertisement -

இந்திய அணியின் 26 வயது முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்குடன் இன்ஸ்டாகிராம் மூலம் நேரடியாக கலந்துரையாடினார். இந்தியாவில் தற்போது இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் அனைவரும் இந்த ஓய்வு நேரத்தை சமூக வலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கழித்து வருகின்றனர்.

Bumrah-2

- Advertisement -

மேலும் அவர்களுக்கு இடையே கிரிக்கெட் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது யுவராஜ் சிங்குடன் கலந்துகொண்ட பும்ராவின் இந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது யுவராஜ் பும்ராவிடம் தொடர்ந்து கிரிக்கெட் குறித்த பல கேள்விகளை அடுத்தடுத்து கேட்டுக்கொண்டே இருந்தார்.

அதற்கு பும்ராவும் ஒன்றன்பின் ஒன்றாக பதில் அளித்துக் கொண்டே வந்தார். அதன்படி யுவராஜ் சிங் இந்திய அணி கேப்டன் விராத் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரில் யாரை சிறந்த பேட்ஸ்மேனாக நினைக்கிறீர்கள் ? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் : இதை பாருங்கள் நான் வெறும் நான்கு ஆண்டுகள்தான் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறேன்.

sachin-kohli

அவர்களில் யார் சிறந்தவர் என்பதை கணிக்கும் அளவிற்கு போதுமான அனுபவம் எனக்கு கிடையாது. விராட் அல்லது டெண்டுல்கர், சச்சின் அல்லது கோலி இதுபோன்ற கேள்விக்கு பதில் அளிக்கக் கூடிய நிலையில் நான் இல்லை. ஏனெனில் அவர்கள் என்னை விட மிக மிக அதிக சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.

- Advertisement -

உடனே யுவராஜ் அதற்கு நான் உனது சுயசரிதையை இங்கு கேட்கவில்லை ஐந்து வினாடிக்குள் உனக்கு பிடித்தமான வீரர் யார் என்பதை கூறியாக வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த பும்ரா கூறுகையில் : உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை சச்சின் பெற்றுள்ளார். கோலியும் அவரது ரசிகர் தான் அதனால் நான் டெண்டுல்கரை தேர்வு செய்கிறேன் என்று சொன்னார்.

Bumrah

மேலும் இந்த உரையாடலின் ஒரு கட்டத்தில் பும்ராவின் பேட்டிங் குறித்து மோசமாக (ஆனால் கிண்டலாக) விமர்சித்தார். உனக்கு பேட்டிங்கே தெரியாது என்றும் கூறினார். அதற்கு பதிலளித்த பும்ரா ஒரு காலத்தில் நான் மும்பை அணிக்காக 20 பந்துகளில் 42 ரன்களை அதிரடியாக குவித்ததாக கூறினார். அதற்கும் பதிலளித்த யுவ்ராஜ் அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கா என்றும் கேட்டுள்ளார்.

Advertisement