Yuvraj Singh : நான் கண்டு பயந்த பந்துவீச்சாளர்கள் என்றால் அது இவர்கள் இருவர் தான் – யுவராஜ் சிங்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கை

Yuvraj
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி அது எனது அதிர்ஷ்டம்.

yuvraj 3

- Advertisement -

பல போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அதில் நிறைய போட்டிகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் மறக்க முடியாத போட்டிகள் யாவும் இருக்கின்றன. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பையின் இறுதி போட்டி என்னால் மறக்க முடியாத போட்டிகளாகும் என்றும் கூறினார்.

இந்நிலையில் நேற்றைய பேட்டியின்போது யுவராஜ் சிங் தான் சந்தித்த மிகக் கடினமான இரண்டு பவுலர்கள் குறித்து பேசியுள்ளார். அதன்படி யுவராஜ் சிங் கூறியதாவது : நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எத்தனையோ பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விட்டேன். தேவைக்கு ஏற்ற அளவிற்கு அதிரடியாகவும் விளையாடி விட்டேன்.

murali

ஆனால் எனக்கு பயத்தை காண்பித்த இரண்டு பந்துவீச்சாளர்கள் என்றால் அது ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தான் மேலும் இவர்கள் இருவரின் பந்துகளை நான் எதிர்கொள்ளும் போது பயத்துடனும், பதட்டத்துடனும் எதிர் கொண்டு உள்ளேன். அந்த அளவிற்கு அவர்கள் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் அவர்கள் என்று யுவராஜ் சிங் கூறினார்.

Advertisement