எனக்கு நடந்த அந்த கொடுமை சேவாக் மற்றும் ஜாஹீர் கானுக்கும் நடந்தது – யுவராஜ் மனம்திறந்த பேட்டி

Yuvraj
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மற்றும் முன்னாள் வீரருமான யுவராஜ் சிங் கடந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெற விரும்புவதாக இந்திய அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாததை அடுத்து அவர் திடீரென்று ஓய்வு முடிவை அறிவித்து இருந்தார்.

yuvraj 3

- Advertisement -

இதுபற்றி அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் யுவராஜ் கூறியதாவது : சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்குப் பின் நான் இரண்டு ஆட்டங்களில் ஆட்ட நாயகன் விருது பெற்று இருந்தேன். ஆனால் அதற்கு பின்னர் என்னை அணியில் சேர்க்கவில்லை. மேலும் என்னை அணியிலிருந்து நீக்குவார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. அந்த சமயம் இலங்கை தொடருக்காக நான் தயாராக இருந்தேன் அப்போது என்னை திடீரென யோ-யோ தேர்விற்கு அழைத்தார்கள்.

நான் தகுதி பெற மாட்டேன் என்று அவர்கள் நினைத்தாலும் அந்த தேர்வில் நான் தேர்ச்சி அடைந்தேன். அதன்பின்னர் அவர்கள் என்னை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட சொன்னார்கள். அதன்பிறகு என்னிடம் பேசவே இல்லை. இந்திய அணிக்காக 17 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி இருந்தும் என்னிடம் ஒரு வீரராக அவர்கள் எந்த விடயத்தையும் உட்கார்ந்து ஆலோசனையாக பேசவில்லை. இதேபோன்ற விடயம் எனக்கு முன்னால் சேவாக் மற்றும் ஜாஹீர் கான் ஆகிய இருவருக்கும் நடந்தது.

virender sehwag

Zaheer

இந்திய அணியின் சீனியர் வீரர்களான அவர்களிடம் யாரும் ஓய்வு குறித்து அமர்ந்து பேசவே கிடையாது. அவர்களாகவே எங்களை ஒதுக்கினார்கள். நாங்கள் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ஆனால் இந்திய அணி நிர்வாகம் எங்களிடம் உட்கார்ந்து ஓய்வு குறித்து பேசி இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை கடைசிவரை செய்யவில்லை வருத்தத்துடன் நாங்கள் இந்திய அணியில் இருந்து விலகி போவோம் என்று நினைக்கவில்லை என்று யுவராஜ் சிங் வருத்தமுடன் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement