நான் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிப்பதற்கு முன் பிளிண்டாப் உடன் நடைபெற்ற சண்டை இதுதான் – 13 ஆண்டு ரகசியத்தை உடைத்த யுவராஜ் சிங்

Yuvi

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் தொடரின்போது யுவராஜ் ருத்ர தாண்டவம் ஆடி ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார். மேலும் 12 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனை படைத்தார். டி20 வரலாற்றில் இதுவே அதிவேக அரைசதமாக இதுவரை உள்ளத்து. இந்த சாதனை தற்போது வரை யாராலும் முறியடிக்கவில்லை. மேலும் இனிவரும் காலங்களிலும் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

Yuvi 2

இந்நிலையில் தற்போது யுவராஜ் அந்த 6 சிக்ஸர்களை அடிக்கும் முன் இங்கிலாந்து வீரரான பிளிண்டாப்புடன் ஏற்பட்ட வார்தைப்போர் குறித்த முழுத்தகவலையும், அவர்களுக்குள் என்ன உரையாடல் நடந்தது என்றும் தற்போது அவர் வெளியிட்டுள்ளார். யுவராஜ் சிங் பேட்டிங் பிடித்துக்கொண்டிருந்தபோது, அந்த முக்கியமான ஓவரை இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீசினார்.

அவரது பந்துகள் அனைத்தும் சிக்சருக்கு விளாசப்பட்டது. இந்த குறிப்பிட்ட ஓவருக்கு முன்னால் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஆன்ட்ரு பிலின்டாப் யுவராஜ் உடன் பெரிய வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. மேலும் ஒவ்வொரு சிக்ஸர் அடித்ததும் இங்கிலாந்து பவுலரான பிராட் செய்வதறியாது திகைத்து நின்றார். மேலும் அடுத்தடுத்த பந்துகளை எங்கு வீச வேண்டும் என்ற குழப்பமும் அவரிடம் தென்பட்டது.

Yuvi 1

அப்போது பிராட்டிடம் எந்த பகுதியில் பந்துவீச வேண்டும் என்றும் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் ஆலோசனை வழங்கினார்கள். தற்போது அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று யுவராஜ் சிங் கெவின் பீட்டர்சனிடம் இன்ஸ்டாகிராம் நேரலையில் தெரிவித்துள்ளார். முதலில் பிலின்டாப் எனக்கு ஓவர் வீசும்போது நன்றாக வீசிக் கொண்டிருந்தார். அதில் ஒரு நல்ல யார்க்கர் பந்தை நான் பவுண்டரிக்கு அனுப்பினேன்.

- Advertisement -

நான் அடித்த அந்த ஷாட்டினை பார்த்த அவர் கடுப்பாகி அது மொக்கையான ஷாட் என்று கூறினார். மேலும், எனது தொண்டையை அருப்பேன் எனவும் கூறினார். நான் சிறப்பாக ஆடிய ஷாட் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் அப்போதே எனக்கு தோன்றியது. மேலும் அவர் என்னை பார்த்து முணுமுணுத்துக்கொண்டே இருந்தார். இதனால் எனக்கு சற்றே கோவம் அதிகரித்தது. இதனால் எனது பேட்டால் பதிலளிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

Yuvi 3

மேலும் நான் அவரிடமே நேரடியாக பதிலளிக்க எண்ணி நான் என் கையில் பேட் இருக்கிறது நானும் செய்வேன் என்று பதிலளித்தேன். மேலும் நீங்கள் அடுத்து வீசப்போகிற உங்கள் பந்துகள் எங்கெல்லாம் எங்கே பறக்கப்போகிறது என்று பாருங்கள் என்று ஆக்ரோஷமாக பேசினேன் . அதன்பின்னர் பிராடை 6 சிக்சர்கள் விளாசி விட்டு செம கடுப்பில் இருந்தேன் .சிக்ஸர் அடித்த உடன் மஸ்கர்னாசை பார்த்தேன். அதன் பின்னர் மீண்டும் பிலின்டாபை பார்த்தேன்.

அதற்கு முந்தைய ஒருநாள் தொடரில் தான் மஸ்கர்னாஸ் எனது பந்தை ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசி இருந்தார். அதனால் 6 சிக்ஸர்கள் அடித்தவுடன் முதலில் மஸ்கர்னாசை பார்த்தேன் அதன்பின்னரே பிளிண்டாப்பை பார்த்தேன். ஆனால் அப்போதும் எனது கோவம் தணியாமல் நான் ஆக்ரோஷத்தோடு இருந்தேன் மட்டும் என்று எனக்கு நியாபகம் இருப்பதாக யுவ்ராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.