கிரிக்கெட் விட்டே போய்டலாம்னு நெனச்ச அப்போ இவர் சொன்ன வார்த்தை தான் என்னை மீண்டும் விளையாட வைத்தது – யுவராஜ் உருக்கம்

Yuvi

யுவராஜ் சிங் இந்திய அணிக்கு 2000மாவது ஆண்டில் இருந்தே விளையாடி வந்தார். கிட்டத்தட்ட 17 வருடங்கள் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி பல கோப்பை வெல்ல காரணமாக இருந்துள்ளார். 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50வது உலக கோப்பை என இரண்டு கோப்பையை வெல்வதற்கு இவர் மிகப் பெரும் காரணமாக இருந்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

yuvidhoni

இது 2011-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடருக்குப் பின்னர் இவருக்கு புற்றுநோய் பாதித்தர்து. இந்த புற்று நோயிலிருந்து மீண்டு வர கடுமையாக போராடினார். மீண்டு வந்த பின்னர் பழைய யுவராஜ் சிங் போல் ஆட முடியவில்லை. அப்போது கிரிக்கெட் விட்டே விலகி விடவேண்டும் என்று நினைத்துள்ளார். அந்த கட்டத்தில் சச்சின் டெண்டுல்கரிடம் பேசியிருக்கிறார் யுவராஜ் சிங்.

அப்போது நாம் ஏன் கிரிக்கெட் ஆடுகிறோம்? சர்வதேச கிரிக்கெட் ஆட விரும்புகிறோம் என்பதெல்லாம் வேறு கதை. ஆனால் இந்த விளையாட்டின் மீது உள்ள காதல் காரணமாக ஆடிக் கொண்டிருக்கிறோம் எனபது தான் உண்மை. இந்த விளையாட்டை நீ விரும்பினால் ஆடு இல்லை என்றால் ஒதுங்கி விடு என்று சச்சின் டெண்டுல்கர் யுவராஜ் சிங்கிடம் கூறியுள்ளார்.

yuvraj

இந்த விளையாட்டை விரும்பினால் ஆடு இல்லையென்றால் ஓய்வு பெறலாம் என்பதை நீயே முடிவு செய்துகொள். மற்றவர்கள் அதை முடிவு செய்ய விட்டுவிடாதே. நான் உன்னிடத்தில் இருந்தால் என்ன செய்வேன் என்று எனக்கு தெரியாது என்று விளக்கமளித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். #

- Advertisement -

YuvrajSingh

இதனை வைத்துதான் யுவராஜ் சிங் மீண்டும் களத்திற்கு வந்து மேலும் ஆறு வருடங்கள் விளையாடினார் அதுமட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற போட்டியில் 127 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.