இந்திய அணி ஒரு உலகக்கோப்பையை இழக்க நான் காரணமாக அமைந்துள்ளேன் – உண்மையை ஒப்புக்கொண்ட யுவ்ராஜ் சிங்

Yuvi
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் கடந்த ஆண்டு முறைப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரின் இந்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி அளித்தது. இருப்பினும் யுவராஜ் சிங்கிற்கு இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பல ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வந்த யுவராஜ் சிங் பஞ்சாப் அணி தன்னை நிராகரித்ததாகவும் சில தினங்களுக்கு முன்னர் பேட்டி அளித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது டி20 அரங்கில் தான் நடித்த அதிவேக அரைசதத்தை முறியடிக்கும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது குறித்து தற்போது யுவ்ராஜ் சிங் மனம்திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சர்வதேச டி20 அரங்கில் எனது அதிவேக அரைசதம் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியில் ஒருவருக்கு மட்டுமே உள்ளது. அது யார் என்றால் இந்திய அணியின் சிறந்த ஆல்-ரவுண்டரான ஹர்டிக் பாண்டியாவுக்கு மட்டுமே என்னுடைய சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

இவரை முறையாக யாராவது வழி நடத்தினால் நிச்சயம் என்னுடைய சாதனையை இவர் கண்டிப்பாக முறியடிப்பார் என்று யுவ்ராஜ் சிங் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய யுவராஜ் சிங் பஞ்சாப் அணியை நான் நீண்ட காலமாக நேசிக்கிறேன். அந்த அணி நிர்வாகத்துக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை. அதன் காரணம் ஏன் என்று எனக்கு தெரியவில்லை அதனால். அங்கு இருந்து விலக முடிவு செய்தேன் அதேபோன்று அந்த அணியில் இருந்து நான் வெளியேறிய பின் நான் கேட்ட அனைத்து வீரர்களையும் அவர்கள் அணியில் இணைத்தனர்.

pandya

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வு அதிர்ச்சி அளித்தது. ஐந்து ஒருநாள் போட்டிகள் மட்டும் விளையாடிய ஒரு வீரரை மிடில் ஆர்டரில் களமிறக்கியது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதனை நானும் ஆமோதிக்கிறேன் என்று கூறினார். மேலும் அதேபோன்று 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பைனலில் கண்ட தோல்விக்கு முற்றிலும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

- Advertisement -

இந்த போட்டியில் நான் சரியாக விளையாடவில்லை ஆனால் இலங்கை பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார். இப்போட்டியில் மற்றவர்களும் தடுமாறினார் ஆனால் ரசிகர்கள் மற்றும் மீடியாவும் எண்ணை குறிப்பிட்டு தாக்கிப் பேசினார்கள். அப்போது ரசிகர்கள் சிலர் சண்டிகரில் உள்ள எனது வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்தினர். வீட்டிற்கு வந்தபோது நான் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசிய பேட் மற்றும் தொப்பியை பார்த்தேன். அப்போது என் நேரம் முடிந்து விட்டது என்றும் யுவ்ராஜ் உணர்ந்ததாகக் கூறுயதும் குறிப்பிடத்தக்கது.

Yuvi 3

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 2000 ஆவது ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8701 ரன்களையும், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900 ரன்களையும் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடி 1177 ரன்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement