இப்படியெல்லாம் இனிமே வெளியில் பேசிடாதீங்க. நல்லா இருக்காது அப்ரிடியை நேரடியாக எச்சரித்த யுவ்ராஜ் சிங் – விவரம் இதோ

Afridi

பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என அனைவரும் இந்தியாவுக்கு எதிரான சர்ச்சையாக கருத்துக்களை பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடி காஷ்மீர் குறித்து சர்ச்சையான கருத்தை ஒன்றிணை தற்போது வெளியிட்டுள்ளார்.

Afridi

எப்போதும் சர்ச்சையான விஷயங்களை பேசும் பாகிஸ்தான் வீரர்கள் இப்போதும் இந்தியாவுக்கு எதிராக பல விடயங்களை பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது அதிகப் பிரசங்கித் தனமாக இந்திய பிரதமர் மோடி குறித்து விமர்சித்துள்ள அப்ரிடி குறித்து இந்திய அளவில் எதிர்ப்புகள் அதிகமாகி வருகின்றன.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் அப்ரிடியின் கருத்துக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பாகிஸ்தான் அண்மையில் உள்ளார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரு கிராமத்திற்குச் சென்ற அப்ரிடி அது ஒரு அழகான கிராமம் அங்கு வந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருந்தார்.

மேலும் அங்கு தான் வரவேண்டும் என்றும் நீண்ட காலம் நினைத்ததாக தன் கருத்தினை முன் வைத்திருந்தார். மேலும் எவ்வளவு நாள் யோசித்த ஞாபகம் இன்றே நினைவானது. உலகமே அவதிப்படும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதைவிட மோசமான நோய் இந்த கிராமத்தில் உள்ளதாகவும் அது மோடியின் மைண்ட் தான் என்று அப்ரிடி கூறியுள்ளார்.

- Advertisement -

இப்படி சர்ச்சையான வகையில் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்த இவரது இந்த கருத்திற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ள யுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நான் இந்தியனாகவும், இந்திய அணிக்காக ஆடி இருக்கிறேன் என்ற வகையில் பிரதமர் மோடியை பற்றி அப்படி பேசி அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் இனிமேல் இப்படி நடக்கக் கூடாது ஜெய் ஹிந்த் என்று அவருக்கு எதிராக பதிலளித்துள்ளார்.

afridi-harbhajan

ஹர்பஜன் சிங்கும் இவ்வாறு அதற்கு சப்போர்ட் செய்யும் விதமாக பதில் அளிக்க அவருக்கு எதிராக தற்போது எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. மேலும் லிமிட்டை தாண்டி தவறாக பேசக்கூடாது என்றும் அப்ரிடியை இவர்கள் இருவரும் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.