18 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியில் ஆடிவரும் யுவராஜ் சிங் கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை தாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். சமீபத்தில் பிரபல ANI செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த யுவராஜ் சிங் நான் 2019 இல் நடக்க உள்ள உலக கோப்பை போட்டிகள் வரை தொடர்ந்து ஆட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.
அந்த ஆண்டிற்கு பிறகு நான் என்ன செய்ய வேண்டும் என்று பின்னர் முடிவெடுப் பேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிய யுவராஜ் அனைவருமே ஒரு முடிவை சற்று யோசித்து தான் எடுக்க வேண்டும் , நான் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து விளையாடிவருகிறேன்.
ஆகையால் கண்டிப்பாக 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் ஒரு முடிவை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.தற்போது 36 வயதாகும் யுவராஜ் ஐ பி எல் லில் பஞ்சாப் அணியில் ஆடி வருகிறார். மேலும் இந்த ஆண்டு பஞ்சாப் அணி கண்டிப்பாக பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்த யுவி.
சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளும் மிகவும் சிறப்பாக ஆடிவருகிறது . இந்த ஐ. பி. எல் சீசனில் இந்த இரண்டு அணிகள் தான் மிக சிறந்த அணிகள் என்று புகழ்ந்து பேசியுள்ளார் யுவராஜ்.