யுவராஜ்சிங் விரைவில் அணிக்கு திரும்புவார்.

yuvi
- Advertisement -

இளம் கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் நுழைந்த யுவராஜ்சிங் பின்னாட்களில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாகவே மாறினார். அவரது அபாரமான பேட்டிங்காலும், பீல்டிங்காலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தாலும் எதிரணியினரின் தோல்விக்கு பல ஆட்டங்களில் முக்கிய காரணமானார்.

YuvrajSingh

- Advertisement -

பல தொடர்களிலும்,முக்கிய போட்டிகளிலும் இந்திய அணி வெல்ல காரணமாக இருந்த இவருக்கென இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதும் தனி இடமுண்டு.

சிக்கலான நேரங்களில் களமிறங்கி சிக்ஸர் மழை பொழிவதாகட்டும், நினைத்து பார்க்கவே முடியாத கேட்ச்களை சளைத்துகொள்ளாமல் பறந்து சென்று பிடிப்பதாகட்டும்,இக்கட்டான சூழலில் பந்துவீசி எதிரணியினரின் விக்கெட்களை திடீரென வீழ்த்துவதாகட்டும் யுவராஜ்சிங்கிற்கு நிகர் அவரே.

இவ்வளவு திறமைவாய்ந்த வீரருக்கு சமீபகாலங்களாக அணியில் இடம் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானதே. அவரது உடல்நிலையும் உடல்தகுதியும் சிறிது மோசமாக இருந்தாலும் விரைவில் அவர் அணிக்கு திரும்பி மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
yuviraj

யுவராஜ்சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் முழுமையாக அதிலிருந்து மீண்டு வந்தவர் என்பது கூடுதல் தகவல்.

Advertisement