ஓய்விலிருந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பும் இந்திய நட்சத்திரம் – பின்னணி இதுதான்

Yuvraj

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 ஒருநாள் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். தான் விளையாடிய காலத்தில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட வீரர்களில் ஒருவரான யுவ்ராஜ் சிங் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டு பெரிய உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

yuvraj 2

அதன் பின்னர் புற்றுநோய் பாதிப்பால் தடம் புரண்ட யுவராஜ் சிங்கின் வாழ்க்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது. ஆம் கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் தனது ஓய்வு அறிவிப்பை திடீரென அறிவித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராக இருப்பதாகவும், நான் மீண்டும் விளையாட விரும்புவதாகவும், தனது ஓய்வை திரும்பி பெற அனுமதிக்குமாறும் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் பஞ்சாப் அணி நிர்வாகத்துடன் இணைந்து அண்மையில் பயிற்சியில் ஈடுபட்ட இவர் பயிற்சியில் இளம் வீரர்கள் பலரை தயார் செய்துள்ளார். அதன் காரணமாக தான் மீண்டும் பஞ்சாப் மாநில கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடி புதிய வீரர்களை தயார்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

yuvraj 3

ஏற்கனவே பஞ்சாப் மாநில கிரிக்கெட் செயலாளர் புனித் பாலி யுவ்ராஜ் மீண்டும் கிரிக்கெட் விளையாட வரவேண்டும் என்றும் இளம் வீரர்களை தயார்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வேண்டுகோளை ஏற்று யுவராஜ் தற்போது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று இளம் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை தயார் படுத்த மீண்டும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகிஉள்ளது.

- Advertisement -

YuvrajSingh

இருப்பினும் பிசிசிஐ எடுக்கும் முடிவே இறுதியானது. எனவே யுவராஜ் சிங்கின் இந்த ஓய்வு முடிவை திரும்பப் பெறும் வேண்டுகோளை கங்குலி ஏற்பாரா ? என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். எது எப்படி இருப்பினும் மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராக இருப்பது யுவ்ராஜ் சிங் பற்றி கூறி உள்ளதால் அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.