இந்திய அணியின் அதிரடி வீரரான யூசப் பதான் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமானார். அதன் பின்பு இந்திய அணிக்காக 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 236 ரன்களை குவித்துள்ளார். மேலும் 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள யூசப் பதான் 810 ரன்களை அடித்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் அடங்கும்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 123 ரன்களை எடுத்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் மேட்ச் வின்னராக திகழ்ந்த அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் 174 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3204 ரன்கள் சேர்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ள அவர் ஆடிய அனைத்து அணிகளிலும் ஒரு முக்கிய வீரராகவும் அதிரடி ஆட்டக்காரவும் திகழ்ந்துள்ளார். மேலும் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் இர்பான் பதான் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனைவரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று அவரது ஓய்வு அறிவித்துள்ள யூசப் பதான் : அதிகாரப்பூர்வமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். இந்த நேரத்தில் என்னுடைய குடும்பம், நண்பர்கள் ரசிகர்கள் அணிகள் அதுமட்டுமில்லாது ஒட்டுமொத்த நாட்டுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
I thank my family, friends, fans, teams, coaches and the whole country wholeheartedly for all the support and love. #retirement pic.twitter.com/usOzxer9CE
— Yusuf Pathan (@iamyusufpathan) February 26, 2021
என்னுடைய வருங்கால முயற்சிகளுக்கும் உங்களின் ஆதரவும் அன்பும் இருக்கும் என தான் நம்புவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒருபுறம் அவரின் வருங்கால வாழ்க்கைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற யூசப் பதானுக்கு சமூக வலைதளம் மூலம் அனைவரும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் யூசப் பதான் குறித்து நெகிழ்ச்சியான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :
Chacha! Congratulations on an amazing career @iamyusufpathan! One of the most powerful and clean strikers of the ball. It was great sharing the dressing room with you, especially during 2007 and 2011 WC victories. Good luck for the 2nd innings! Go well buddy 👊🏻
— Yuvraj Singh (@YUVSTRONG12) February 26, 2021
உங்களது சிறப்பான கிரிக்கெட் கேரியருக்கு எனது வாழ்த்துக்கள். “சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பவர்ஃபுல்லான கிளீன் ஹிட்டர்களில் ஒருவர் நீங்கள்” உங்களுடன் ஓய்வு அறையை பயன்படுத்தியதும் 2007 t20 மற்றும் 2011 50 ஓவர் உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் இருந்ததும் மகிழ்ச்சி. உங்களது இரண்டாவது இன்னிங்சிற்கு எனது வாழ்த்துக்கள் என தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.