கும்ப்ளே, ஹர்பஜனை பாராட்ட அஷ்வினை தரக்குறைவாக பேசுவதா – சர்ச்சைக்கு உள்ளான யுவராஜ் சிங்கின் கருத்து

Yuvi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரரான ஆர்ச்சரை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும் சாய்த்தார்.

Ashwin

- Advertisement -

முரளிதரனுக்கு அடுத்தபடியாக குறைந்த போட்டிகளில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்தார். 400 விக்கெட்டுகளை வீழ்த்த அஸ்வின் வெறும் 77 போட்டிகளில் மட்டுமே எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்து டேல் ஸ்டைன் 80 போட்டிகளிலும், ஹெராத் 84 போட்டிகளிலும், கும்ப்ளே 85 போட்டிகளிலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை கும்ப்ளே 619 விக்கெட்டுகள் உடன் முதலிடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்திலும், ஹர்பஜன் 417 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அவருக்கு அடுத்தப்படியாக தற்போது நான்காவது இடத்திற்கு அஸ்வின் முன்னேறி உள்ளதால் அவரை பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ashwin

இவ்வேளையில் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அஸ்வினுக்கு எதிர்மறையான கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் : இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டி முடிவடைந்தது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல. அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் போன்ற வீரர்கள் இதுபோன்ற ஆடுகளத்தில் பந்து வீசி இருந்தால் 1000 மற்றும் 800 விக்கெட்டுகளை எடுத்து இருப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் எது எப்படி இருப்பினும் அஸ்வின், அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார். யுவராஜ் சிங்கின் இந்த கருத்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் மற்ற வீரர்கள் இந்த மைதானம் குறித்து விமர்சித்தாலும் இந்திய வீரரான இவர் இந்த மைதானத்தை மட்டுமின்றி இந்த போட்டியையும் விமர்சித்துள்ளார்.

அதையும் தாண்டி அஸ்வினை மட்டுப்படுத்தும் வகையில் அவர் போட்டிருக்கும் இந்த பதிவு தவறானது எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement