Yuvraj Singh : இணையத்தில் வைரலாகி வரும் யுவராஜின் உணர்ச்சிகர வீடியோ – விவரம் இதோ

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் இன்று பத்திரிக்

Yuvi
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி அது எனது அதிர்ஷ்டம்.

yuvraj 2

- Advertisement -

பல போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அதில் நிறைய போட்டிகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் மறக்க முடியாத போட்டிகள் யாவும் இருக்கின்றன. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பையின் இறுதி போட்டி என்னால் மறக்க முடியாத போட்டிகளாகும் என்றும் கூறினார்.

இந்நிலையில் யுவராஜ் சிங் குறித்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் யுவராஜ் 12 என்று பதிக்கப்பட்ட தனது கிரிக்கெட் ஆடையைத் தொட்டு பார்த்து அதற்கு விடை கொடுக்கிறார். இந்த வீடியோவினை கண்ட ரசிகர்கள் யுவராஜ் உணர்ச்சிகரமாக கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்து நினைத்து வருத்தத்தில் உள்ளனர்.

Yuvraj

மேலும் இந்த வீடியோவினை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காத இவருக்கு இனிமேல் அணியில் இடம் கிடைக்காது என்று நினைத்ததால் நேற்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார் யுவராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement