கங்குலியின் மூலம் கிடைத்த வாய்ப்பு. அநியாயமா வேஸ்ட்டா போச்சு – யுவ்ராஜின் நிறைவேறாத ஆசை

Yuvi

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 2003 ஆம் ஆண்டு, 2007 ஆம் ஆண்டு, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியவர். மேலும் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெற்று அசத்தியவர்.

yuvi

இந்திய அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ள மிகச்சிறந்த மேட்ச் வின்னரான இவரின் கடைசி காலகட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் கேன்சருக்கு பிறகு அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் சில ஆண்டுகளில் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு தற்போது கடந்த ஆண்டு கட்டாய ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ள அவர் கூறுகையில் : இந்தியாவுக்காக நான் அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்பினேன். இருந்தாலும் அந்த நாளில் எனக்கான இடம் கிடைப்பது என்பது பெருத்த சவாலாக இருந்தது.

Yuvi

ஏனெனில் அணியில் சச்சின், டிராவிட், லட்சுமனண், கங்குலி மாதிரியான ஜாம்பவான் வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். அதன் காரணமாக எனக்கு டெஸ்ட் அணியில் இடம் என்பது கடினமாக இருந்தது. இருந்தாலும் அவ்வப்போது எனக்கு ஓரிரெண்டு போட்டிகளில் மட்டும் விளையாட தான் வாய்ப்பு கிடைக்கும். கங்குலியின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் அணியில் விளையாட எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

Yuvi

ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்தும் திசை மாறிவிட்டது. இருந்தாலும் நான் நாட்டிற்காக இவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாடியதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். யுவ்ராஜ் சிங் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.