எனக்கு மட்டுமல்ல இவங்க 5 பேருக்கும் இந்திய அணியில் சரியான மரியாதை கெடைக்கல – பி.சி.சி.ஐ-யை விளாசிய யுவ்ராஜ் சிங்

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 2000 ஆவது ஆண்டில் கென்யா அணிக்கு எதிராக அறிமுகமானார். சர்வதேச கிரிக்கெட்டில் 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்த இவர் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 2007 மற்றும் 11 ஆம் ஆண்டுகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அணியில் வாய்ப்பு இல்லாமல் இருந்த யுவராஜ் கடந்த ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். மேலும் ஓய்வு அறிவித்த அவர் பிசிசிஐ தனக்கு உரிய மரியாதையும், சரியான வழி அனுப்புதலையும் கொடுக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார். அவர் ஓய்வு பெற்றபோது இந்திய அணியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் தற்போது தனக்கு மரியாதை அளிக்காத பி.சி.சி.ஐ இதுபோன்று மேலும் சில முன்னாள் வீரர்களை சரியான முறையில் வழி நடத்தவில்லை என்றும் அவர்களுக்கான கடைசி வழியனுப்பு போட்டியை அவர்கள் நடத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் ஒரு ஜாம்பவான் இல்லை, அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடி பல ரெக்கார்டுகளை வைத்துள்ள ஜாம்பவான் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு சிறப்பான வழியனுப்புதல் அவசியமானது. ஆனால் பிசிசிஐ அதுபோன்று செய்வதில்லை. மேலும் பல நல்ல கிரிக்கெட் வீரர்களின் கடைசி காலத்தை சரியாக கையாளவில்லை என்று நினைக்கிறேன். திரும்பிப் பார்த்தால் பெரிய வீரர்களான ஹர்பஜன், சேவாக், ஜாகீர் கான், கம்பீர், லட்சுமணன் ஆகியோர் மோசமாக கையாளப் பட்டார்கள்.

- Advertisement -

இது இந்திய அணியின் கிரிக்கெட்டின் ஒரு அங்கம் ஆனால் அது எனக்கு ஆச்சரியமாக இல்லை என்று கூறியிருந்தார். மேலும் நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர்களுக்கு சரியான வழி அனுப்புதல் போட்டியை நடத்தி அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் இனிவரும் எதிர்காலத்திலாவது நன்றாக விளையாடும் இந்திய வீரர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்றும் யுவ்ராஜ் சிங் கேட்டுக்கொண்டார்.

Laxman

இரண்டு உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த கம்பீர், மேட்ச் வின்னர் ஆன சேவாக், டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் லட்சுமணன் மற்றும் ஜாகிர்கான், ஹர்பஜன் சிங் போன்றோருக்கும் கூட சரியான மரியாதை கிடைக்கவில்லை என்று யுவ்ராஜ் சிங் பிசிசிஐ-யை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement