இந்த மாதிரி பிட்சில இவங்க 2 பேரும் விளையாடி இருந்தா 1000 விக்கெட் எடுத்து இருப்பாங்க – அகமதாபாத் மைதானத்தை விளாசிய யுவராஜ்

Yuvraj-Singh
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி கடந்த 24ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களை குவிக்க அடுத்ததாக இந்திய அணி 145 ரன்கள் குவித்தது. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ind

- Advertisement -

அதனை தொடர்ந்து 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளது ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த இந்த ஆடுகளத்தில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த மைதானம் மீது பலரும் தங்களது அதிர்ப்தியான கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங் இந்த மைதானம் குறித்து கடுமையான விமர்சனத்தை தனது ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

IND

இந்நிலையில் யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டி முடிவடைந்து என்பது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமானது கிடையாது. இது போன்ற மைதானங்களில் அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் பந்து வீசியிருந்தால் அவர்கள் 1000 விக்கெட்டுகள் மற்றும் 800 விக்கெட்டுகள் எடுத்து இருந்திருப்பார்கள். எது எப்படியோ அக்ஷர் மற்றும் அஸ்வின், இஷாந்த் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி பலவிதமான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ஏனெனில் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசி இந்த போட்டியை வெற்றி பெற்றுள்ளார்கள் ஆனால் அவர்களை வாழ்த்துவதற்கு பதிலாக எதிர்மறையாக இவர் பதிவிட்டுள்ள இந்த கருத்து தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement