எனக்கு அடுத்து 6 பந்தில் 6 சிக்ஸர்களை அடிக்க இந்திய அணியில் இவரால் முடியும் – யுவராஜ் சிங் ஓபன்டாக்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்த வீரர்கள் சிலரே இருக்கின்றனர். அந்த வகை வகையில் இந்தியாவை சேர்ந்த யுவராஜ் சிங் 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து மிரள வைத்தார். ஏற்கனவே இந்திய அணி சார்பாக ரவிசாஸ்திரி உள்ளூர் கிரிக்கெட்டில் இந்த சாதனையை செய்திருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையை செய்த வீரராக யுவராஜ்சிங் திகழ்கிறார்.

Yuvi 2

மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த கேரி சோபர்ஸ், பொல்லார்டு, ஹஜரத்துல்லா ஷஜாய், கிப்ஸ், கார்ட்டர் ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர். இப்படி 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்த வீரர்கள் சிலரே இருந்தாலும் தற்போது டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கம் காரணமாக பலரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். மேலும் பல இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி இந்த சாதனையை முறியடிக்க முயற்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்திய அணி சார்பாக யுவராஜ் மட்டுமே செய்துள்ள இந்த சாதனையை இந்திய அணி சார்பாக வேறு யார் படைக்க முடியும் என்ற கேள்விக்கு சமூக வலைதளம் மூலமாக யுவராஜ் சிங் தனது தெளிவான பதிலை விளக்கமாக அளித்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில் : இந்திய அணியில் நான் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்தது போன்று தற்போது உள்ள வீரர்களில் அதிரடி ஆட்டக்காரரான ஹர்டிக் பாண்டியாவால் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Pandya-3

மேலும் சிக்சர்களை அடிக்கும் பலமும், பேட்டிங்கில் நுணுக்கமும் அவரிடம் இருப்பதால் நிச்சயம் அவர் இந்த சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் படைக்க முடியும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கின் இந்த கருத்திற்கு பலர் ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தாலும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை தேர்வு செய்து அவர்களாலும் சிக்சர் அடிக்க முடியும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

pandya 2

இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வரும் ஹார்டிக் பாண்டியா கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனது அதிரடியான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்துகிறார். இதனால் அவரால் நிச்சயம் இந்த சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் படைக்க முடியும் என்று நாம் நம்பலாம். ஏனெனில் ஹார்டிக் பாண்டியா தொடர்ச்சியாக 3 சிக்சர்களை பலமுறை விளாசி உள்ளதை நாம் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement