2015 ஆம் உலகக்கோப்பையில் நான் விளையாடமாட்டேனு முன்னாடியே இவர் எனக்கு சொல்லிட்டாரு – யுவ்ராஜ் சிங் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 2003 ஆம் ஆண்டு, 2007 ஆம் ஆண்டு, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியவர். மேலும் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெற்று அசத்தியவர்.

yuvraj 2

இந்திய அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ள மிகச்சிறந்த மேட்ச் வின்னரான இவரின் கடைசி காலகட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் கேன்சருக்கு பிறகு அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் சில ஆண்டுகளில் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு தற்போது கடந்த ஆண்டு கட்டாய ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ள அவர் கூறுகையில் : நான் திரும்ப கம்பேக் கொடுத்தபோது இந்திய அணியில் மீண்டும் விளையாட எனக்கு ஆதரவு அளித்தவர் விராட் கோலி தான் என்றும் அதை செய்யாமல் போய் இருந்தால் மீண்டும் என்னால் விளையாடி இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Yuvraj 1

மேலும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு குழுவினர் எனது பெயரை பரிசீலிக்கவில்லை என்பது எனக்கு சொன்னதே தோனி தான் என்று அவர் கூறியுள்ளார். 2011ஆம் ஆண்டுவரை தோனிக்கு என் மீது அதீத நம்பிக்கை இருந்தது. நான்தான் அவரது அணியில் பிரதான வீரர் என்று எப்போதும் என்னிடம் சொல்வார் .

- Advertisement -

yuvraj 3

ஆனால் நான் 2015 ஆம் ஆண்டு வாக்கில் மீண்டும் இந்திய அணிக்கு நோய்வாய்ப்பட்டு திரும்பி வந்த போது நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து இருந்தன. அதனால் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் என்னை பரிசு அளிக்காதது ஏமாற்றம் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது எதிர்காலம் குறித்து எனக்கு சரியான தெளிவை ஏற்படுத்தியவர் தோனி தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.