எனக்கு பிடித்த 4 இடதுகை பேட்ஸ்மேன்ஸ் இவங்கதான் – யுவ்ராஜ் சிங் வெளியிட்ட கருத்து

yuvisix
- Advertisement -

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 17 வருடங்கள் விளையாடி இருக்கிறார். இவர் ஆடிய காலகட்டத்தில் இவர் தான் இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் என ஆல்ரவுண்டராக இருந்த அவர் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். மேலும் இந்திய அணி வென்ற அனைத்து ஐ.சி.சி டிராபி தொடர்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

yuvi

- Advertisement -

இன்றளவும் இந்திய அணியில் யுவராஜ் சிங் ஆடிய இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. இந்திய அணியில் ஆசிஷ் நெஹ்ரா, யுவராஜ்சிங், ஜாகிர் கான் போன்ற பல இடங்களில் வீரர்கள் இடதுகை வீரர்களாக இருந்தனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் யுவராஜ் சிங். நேற்று உலக இடது கை பழக்கமுடையோர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. இதனை அறிந்த யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்..

ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதில் எனக்கு பிடித்த இடதுகை வீரர்கள் இவர்கள் தான். உங்களுக்கு எனது மதிப்பும் மரியாதையும் எப்போதும் இருக்கும். உங்களுக்கு பிடித்த இடதுகை ஆட்டக்காரர். அவர்களின் பெயரை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பதிவு செய்து இருந்தார்.

அதில் ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் மேத்யூ ஹைடன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிரிஸ்ட், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா இருந்தார்கள். இதனை பார்த்த ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த பல இடதுகை வீரர்களை பற்றி யுவராஜ் சிங்குடன் பகிர்ந்து கொண்டார்கள்

யுவராஜ்சிங் சமீபகாலமாக சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கிற குறிப்பாக முன்னாள் இந்திய வீரர்கள் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத பல செய்திகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement