இந்திய அணியில் என்னுடைய இடத்தை நிரப்ப இவர்கள் 3 பேரால் தான் முடியும் – யுவ்ராஜ் சிங் வெளிப்படை

Yuvi
- Advertisement -

இந்திய அணியின் இடதுகை அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் 2000 ஆம் ஆவது ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இறுதியாக 2017 வரை இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங் ஓய்வை அறிவித்த பின்னர் அவரது இடத்தை இந்திய அணியில் நிரப்பப் போகும் வீரர் என்ற தேடல் இருந்தது.

YuvrajSingh

- Advertisement -

ஆனாலும் இந்நாள் வரை அவரது இடத்திற்கு நிரந்தரமான வீரர்கள் இன்று வீரர்களை மாற்றி மாற்றி விளையாடி வரும் இந்திய அணியில் யார் தனது இடத்திற்கு சரியாக பொருந்துவார் என்பது குறித்து அவர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான யுவராஜ் சிங் பேட்டிங்கில் அசத்த கூடியவர். தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங் என 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இரண்டிலும் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி யுவராஜ் சிங் தனியாக நின்று பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய இடத்தை நிரப்ப தற்போது உள்ள இந்திய அணியில் மூன்று பேரால் தான் முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த 3 பேர் குறித்து யுவராஜ் கூறுகையில் : தற்போதுள்ள இந்திய அணியில் இடது கை ஆட்டக்காரர்கள் அதிகமாக இல்லை.

pant 1

இருப்பினும் என்னை பொறுத்தவரை என்னுடைய இடத்தை நிரப்ப மூன்று பேரால் முடியும் என்றால் அது ரிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய மூவரால் தான் முடியும். இதில் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதேபோன்று ஜடேஜா பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Jadeja

மேலும் வலது கை இடது கை ஆட்டக்காரர்களாக நானும் தோனியும் விளையாடியது போல தற்போது விளையாட வேண்டும் எனில் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோரால் முடியும். ஹார்டிக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஜடேஜா, பாண்டியா, பண்ட் ஆகிய மூவரால் தான் தன்னுடைய இடத்தை நிரப்ப முடியும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement