இந்திய அணியில் சிறந்த மற்றும் மோசமான கால்பந்து வீரர்களின் பெயர்களை வெளியிட்ட யுவராஜ் சிங்..!

yuvi
- Advertisement -

தற்போது ரஸ்யாவில் நடைபெற்று வரும் உலக கால் பந்து தொடர் தான் உலகம் முழுவதும் அனைவராலும் கண்டுகளிக்கப்ட்டு வரும் விளையாட்டு போட்டியாக இருந்து வருகிறது. இந்திய அணியில் இருக்கும் சில வீரர்கள் கூட கால்பந்து போட்டிக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்திய அணியில் உள்ள சிறந்த கால்பந்து வீரர் யார் என்பதை யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
yuviraj

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து போட்டிகளுக்கு ரசிகர்களாக இருப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. ஏனெனில் இந்திய அணியின் பயிற்ச்சிகளில் கால்ப்பந்து விளையாட்டும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரர்களின் பயிற்ச்சியின் போது சில வீரர்கள் கால்பந்து விளையாடும் சில வீடியோ காட்சிகள் கூட இணையத்தில் உலாவி வருகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வீரரான யுவராஜ் சிங்கும் தீவிர கால்பந்து ரசிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் யுவராஜ் சிங் இந்த ஆண்டு கால்பந்து உலக கோப்பையை பிரான்ஸ் அணி தான் வெல்லும் என்றும், சிறந்த வீரருக்கான தங்க ஷுவை பிரேசில் வீரர் நெய்மர் வெல்வார் என்றும் கூறியுள்ளார். மேலும்,இந்திய அணியில் இருக்கும் சில வீரர்கள் எப்படி கால்பந்து விளையடுவார்கள் என்பதையும் கூறியுள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்து பேசிய யுவராஜ், இந்திய அணியில் தோனி தான் அணியில் சிறப்பாக கால்பந்து விளையாடுவர் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அணியின் சிறந்த வீரரான கோலி ஒரு கோலை கூட அடிக்கமாட்டார் என்று கூறியுள்ளார். அதே போல ‘இந்திய அணியில் உள்ள ரோஹித் ஷர்மா தான் கால்பந்து ஆடுவதில் மிக மோசமான வீரர், அவர் எப்போதும் ஒரே இடத்தில் நின்றுகொண்டு தான் இருப்பார்’ என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

Advertisement