எதிரணிகளை பயமுறுத்திய நீங்க தான் ரியல் கப்பர்.. என்னோட சேந்து இதை செய்ங்க.. தவானுக்கு யுவி அழைப்பு

Yuvraj Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் 38 வயதில் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தார். 2010 – 2022 வரையிலான காலகட்டங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் இந்தியாவுக்காக 10867 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக 2013 சாம்பியன் டிராபியில் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்ற அவர் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அத்துடன் 2015 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்த வீரராகவும் சாதனை படைத்த தவான் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் சிறப்பாக விளையாடி தங்க பேட் விருது வென்றார். அதைத் தொடர்ந்து 2018 ஆசிய கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

- Advertisement -

ஓய்வு பெற்ற தவான்:

அதே போல 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் விளையாடிய தவான் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் காயத்திலிருந்து குணமடைந்த பின் அதிரடியாக விளையாடத் தடுமாறிய அவரை பிசிசிஐ கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டது. கூடவே ஜெயஸ்வால், ருதுராஜ், கில் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களும் வந்து விட்டனர்.

அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தவான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் ஐசிசி ஒருநாள் தொடர்களில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் உலகிலேயே அதிகபட்சமாக 65.15 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். அதனால் மிஸ்டர் ஐசிசி என்றழைக்கப்படும் அவர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து பிரியா மனதுடன் விடைபெற்றுள்ளார்.

- Advertisement -

யுவராஜ் அழைப்பு:

இந்நிலையில் ஐசிசி தொடர்களில் எதிரணியை பயமுறுத்தும் அளவுக்கு ஷிகர் தவான் விளையாடியதாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார். அந்த வகையில் உண்மையான கப்பர் சிங்காக செயல்பட்ட நீங்கள் வரும் காலங்களில் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் தன்னுடன் விளையாட வேண்டும் என்று அவருக்கு யுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் யுவராஜ் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள் ஜாட் ஜீ. உங்களுடன் உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டதில் பெருமையடைகிறேன்”

இதையும் படிங்க: வாயில் லிப்ஸ்டிக் அடிச்சுகிட்டு புறா மாதிரி ஜம்ப் பண்ணுவாரு.. ரிஸ்வானை விளாசிய இந்திய அம்பயர்

“நீங்கள் ஒவ்வொரு வாய்ப்பையும் அதிகமாக பயன்படுத்தி 100க்கும் ஏற்பட்ட சதவீத செயல்பாடுகளை கொடுத்தீர்கள். குறிப்பாக உங்களுக்கு பிடித்த ஐசிசி தொடர்களில் உங்களின் பயமற்ற ஆட்டங்கள் அனைத்து வகையான ஃபார்மெட்டிலும் வெளிப்படுத்திய மேட்ச் வின்னிங் செயல்பாடுகள் உங்களை கண்டு எதிரணிகள் அஞ்சும் உண்மையான கப்பர் ஆக்கியது. நீங்கள் சாதித்துள்ள விஷயங்களுக்கு பெருமையடைய வேண்டும். லெஜெண்ட்ஸ் தொடரில் விளையாட வாருங்கள். நன்றாக செல்லுங்கள் பிரதர்” என்று கூறியுள்ளார்.

Advertisement