பும்ரா ஒருபுறம் இருக்கட்டும்.. அவரோட மாஸ்டர் க்ளாஸ் தான் இந்தியாவை ஜெய்க்க வெச்சுது.. யுவராஜ் பாராட்டு

Yuvraj Singh 4
- Advertisement -

அமெரிக்காவில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா சுமாராக செயல்பட்டு 119 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று நம்பப்பட்டது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 20, ரிசப் பண்ட் 43 ரன்கள் எடுத்தனர்.

ஆனால் பந்து வீச்சில் துல்லியமாகவும் நெருப்பாகவும் செயல்பட்ட இந்திய பவுலர்கள் 20 ஓவரில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். அதனால் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி இந்தியா சாதனை படைத்தது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

யுவராஜ் பாராட்டு:
இந்த வெற்றிக்கு முக்கியமான நேரத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் முக்கிய பங்காற்றினார். அதனாலேயே அவருக்கு ஆட்டநாயகன் விருதும் சமர்ப்பிக்கப்பட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் பும்ரா போன்ற பவுலர்களை சரியான நேரத்தில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா வெற்றியை தலைகீழாக மாற்றியதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ரோஹித் சர்மாவின் மாஸ்டர் கிளாஸ் கேப்டன்ஷிப் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக பாராட்டும் அவர் இந்தியாவின் வெற்றி பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை கொண்ட போட்டியில் இந்தியா த்ரில்லர் வெற்றி பெற்றுள்ளது. ரோகித் சர்மாவின் வியூகம் நிறைந்த மாஸ்டர் கிளாஸ் ஜொலிக்கிறது”

- Advertisement -

“பவுலர்களை அவர் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றினார். மறுபுறம் இந்தியாவின் அந்த துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தானின் பேட்டிங் திணறியது. இந்த வெற்றிக்கு இந்திய அணி மிகவும் தகுதியானது. ரிஷப் பண்ட் நன்றாக விளையாடினார். ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் நன்றாக பந்து வீசினர்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மூளைய யூஸ் பண்ணல.. இதை செஞ்சுருந்தா ஈஸியா இந்தியா மண்ணை கவ்வ வெச்சிருக்கலாம்.. சோயப் அக்தர்

அவர் கூறுவது போல என்ன தான் பும்ரா நன்றாக பந்து வீசினாலும் அவரைப் போன்ற பவுலர்களை சரியான நேரத்தில் கச்சிதமாக பயன்படுத்தியது ரோஹித் சர்மாவின் திறமையாகும். இருப்பினும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் கொண்ட அவருக்கு இது பெரியது கிடையாது என்றே சொல்லலாம். இதே வேகத்தில் அவருடைய தலைமையில் இந்தியா கோப்பையை வெல்வதே பெரிய விஷயமாக இருக்கும்.

Advertisement