Yuvraj Singh : ஓய்வு முடிவினை அறிவிப்பினை வெளியிட விருப்பமில்லை. இருந்தாலும் அறிவிக்கிறேன் – யுவராஜ் சிங்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் இன்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் இன்று பத்திரி

Yuvraj
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் இன்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி அது எனது அதிர்ஷ்டம்.

yuvraj 2

- Advertisement -

<

பல போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அதில் நிறைய போட்டிகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் மறக்க முடியாத போட்டிகள் யாவும் இருக்கின்றன. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பையின் இறுதி போட்டி என்னால் மறக்க முடியாத போட்டிகளாகும்.

இதுவரை என்னை ஆதரித்த எனது ரசிகர்களுக்கும் அணியில் எனது நெருங்கிய நண்பர்களான கம்பீர், சேவாக் மற்றும் ஜாகீர் கான் போன்ற வீரர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இவர்கள் மூவரும் எனது வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்கள். இதுநாள்வரை என்னை தேர்வு செய்து அணியில் விளையாடிய வைத்த போர்டே, ta சேகர் ஆகியோருக்கும் எனக்கு வாய்ப்பளித்த ஐபிஎல் உரிமையாளர்களுக்கும் நன்றி.

- Advertisement -

yuvraj 3

மேலும் எனது ஓய்வு எனது தந்தை யோகராஜ் சிங்கிற்கு வருத்தத்தை அளித்திருக்கும் என்பதை நான் உணர்கிறேன். மேலும் அவர் நான் ஓய்வு பெறுவதை விரும்பவில்லை. இருப்பினும் இந்த சமயமே எனக்கு ஓய்வுக்கான தொடரும் என்றும் மேலும் ஓய்வுக்கு பிறகு சமூக சேவையில் ஈடுபட போவதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்தார்.

yuvraj

யுவராஜ் சிங் இதுவரை 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8701 ரன்கள் குவித்துள்ளார். 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் 14 சதங்களும் 52 அரை சதங்களும் அடங்கும். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900களில் அடித்துள்ளார். மேலும் 58 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement