கிரிக்கெட்டை தொடர்ந்து புதிய அவதாரம் எடுக்கும் யுவராஜ். ஹர்பஜன் இதை ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணிட்டாரு – விவரம் இதோ

Yuvraj-Singh
- Advertisement -

இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை வெல்ல மிகப்பெரும் காரணமாக இருந்தவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். ஆல்ரவுண்டர் ஆக இருந்து தனது காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு கிரிக்கெட்டின் சக்தியாக விளங்கினார். கடந்த வருடம் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்த அவர் தற்போது வேறு ஒரு களத்தில் இறங்க உள்ளார்.

yuvraj 2

- Advertisement -

ஆம் தன்னுடைய இளைய சகோதரர் மற்றும் தன் மனைவியுடன் இணைந்து ஒரு வெப் சீரியசில் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த வெப்சீரிஸ் யுவராஜின் சகோதரர் சராபன் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும், யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங்கும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஸாமை சேர்ந்த கிரீன் ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த வெப்சீரிஸ் தயாரிக்க, யுவராஜ் சிங்கின் மனைவி ஹேசல் கீச் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மிக முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Yuvraj 1

இந்த வெப்சீரிஸ்க்கு இயக்குனர் அக்சய் குமாரின் பச்சன் பாண்டே என்ற படத்திற்கு திரைக்கதை எழுதிய யூனஸ் திரைக்கதை எழுதுவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் இவ்வாறு செய்திகள் வெளியானாலும் யுவராஜ் சிங் இன்னும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிடவில்லை. மேலும் இது தவறுதலாக பரப்பப்பட்ட செய்தியாக கூட இருக்கலாம். இருப்பினும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement