என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை கிட்டத்தட்ட முடித்துவிட்டாய் – யுவராஜை பார்த்து புலம்பிய இங்கிலாந்து வீரரின் தந்தை

- Advertisement -

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் டி20 போட்டிகளுக்கான உலக கோப்பை தொடர் நடந்தது. இந்த தொடரின் ஒரு போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த மோதலின்போது இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங் இங்கிலாந்து இளம் பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராடின் ஓவரை துவம்சம் செய்தார். அந்த ஓவரில் மற்றும் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார்.

Yuvi 2

- Advertisement -

அதுமட்டுமின்றி 12 பந்துகளில் அரைசதம் விளாசி அதிவேக அரைசதம் விளாசியவர் என்ற சாதனையும் படைத்தார். இந்த போட்டியின் சாதனைகள் தற்போது வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த போட்டிக்குப் பின்னர் என்ன நடந்தது என்று யுவராஜ் சிங் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

அந்த போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் என்னை கடுப்பேற்றினார். அவர் ஏதோ சொல்ல வர, நானும் கடுப்பாகி அவரை திட்டினேன். இதனால் கடுமையான கோபத்தில் இருந்த நான் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டேன். இங்கிலாந்து அணிக்கு எதிராக இப்படி ஆடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

Yuvi 1

ஏனெனில் அந்த தொடருக்கு முன்னர் தான் எனது பந்துவீச்சை இங்கிலாந்து வீரர் மஸ்கர்னாஸ் ஐந்து சிக்சர்களை விளாசினார். அவர்களுக்கு திருப்பி கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் போட்டிக்குப் பின்னர் ஸ்டூவர்ட் பிராடின் தந்தை கிறிஸ் பிராட் என்னிடம் வந்து பேசினார்.

- Advertisement -

”ஏறக்குறைய நீ எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டாய் தற்போது அவனுக்கு உன்னுடைய ஜெர்ஸி ஒன்றை கையெழுத்திட்டு தருவாயா? என்றும் கேட்டார். நான் அவரிடம் என்னுடைய இந்திய அணியின் சீருடையை கையெலுத்திட்ட வழங்கினேன் என்று கூறினார் யுவராஜ் சிங்.

Broad

ஸ்டுவர்ட் பிராட்டின் தந்தை க்றிஸ் பிராட் அந்த தொடரில் நடுவர்களில் ஒருவராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு பிறகு தற்போது இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement