ஓப்பனா சொல்றேன். நாங்க இருந்த மாதிரி நீங்க யாரும் இப்போ இல்லை – ரோஹித்திடம் ஆதங்கத்தை கொட்டிய யுவ்ராஜ்

Yuvraj
- Advertisement -

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் தள்ளி வைக்கப்பட்டும் இருக்கின்றன. இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்திய வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவ்வபோது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டும் தங்களது மனைவி மற்றும் மகளுடன் இனிமையான நேரத்தை கழித்து வருகின்றனர்.அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடியும் வருகின்றனர்.

Yuvraj 1

- Advertisement -

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் துணை கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குடன் இன்ஸ்டாகிராமில் நேரடியாக உரையாடினார். இந்த நேரத்தில் பல்வேறு முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் யுவராஜ். இந்த கலந்துரையாடலின் போது யுவராஜ் சிங்கிடம் ரோஹித் சர்மா ஒரு கேள்வி கேட்டார். அதாவது தற்போதைய இந்திய அணிக்கும் அவர் விளையாடிய இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த யுவராஜ் சிங் கூறியதாவது :

நான் இந்திய அணிக்குள் வந்தபோது அல்லது நீ (ரோஹித்) இந்திய அணிக்குள் வந்த போதும் நமது சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர். அப்போது சமூக ஊடகங்கள் கிடையாது. இதனால் வீரர்களுக்குக்கு கவன சிதறல்கள் பெரிதாக இல்லை. சீனியர் வீரர்கள் சொல்லிக்கொடுத்த நடத்தையை இளம் வீரர்கள் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டியதாக இருந்தது.

yuvraj

அதாவது பொதுவெளியில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும், ஊடகங்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது போன்ற பல காரியங்களை இளம் வீரராக இருந்த நாம் சீனியர் வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டோம். ஆனால் தற்போது உள்ளது இதற்கு முந்தைய காலத்தில் இருந்த வீரர்களைப் போல் கிடையாது. அதே நேரத்தில் இளம் வீரர்களுக்கு மிகவும் உன்னிப்புடனும் கவனத்துடனும் இருக்க கூற கடமைப்பட்டுள்ளேன். இது மிகவும் அவசியமானதாகும். தற்போது நீயும் விராட் கோலி மற்றும் நீயும்தான் இந்திய அணியில் நிரந்தர வீரர்கள். மற்ற வீரர்கள் நிரந்தரம் என்று கூறமுடியாது.

- Advertisement -

சீனியர் வீரர்களுக்கு அவர்கள் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதை நிலை நிறுத்துங்கள். அதே நேரத்தில் தற்போது சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களுக்கு இடையே ஒரு சிறிய இடைவெளிதான் இருக்கிறது. எதைப்பற்றி வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை வந்துவிட்டது. மிக இளம் வீரர்கள் பலர் சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இதனை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.

Yuvi-1

எங்கள் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நாம் ஏதாவது ஒன்று செய்ய, அதனை சீனியர் வீரர்கள் தவறு என்று சுட்டிக் காட்டி விட்டால் நமக்கு சங்கடமாக இருக்கும். இதனை நினைத்தே அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தோம். சமீபத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் ஆகிய வீரர்கள் பெண்கள் குறித்து டிவி நிகழ்ச்சியில் சர்ச்சையாக பேசியது.

இது போன்ற சர்ச்சைகளுக்கெல்லாம் எல்லாம் எங்கள் காலத்தில் இடம் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் எங்கள் காலத்தில் நடக்க துளியும் வாய்ப்பில்லை. தற்போதைய இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை விட மற்ற இரண்டு போட்டிகளில் விளையாடுவதையே விரும்புகின்றனர்.
நான் இந்திய அணிக்குள் வரும்போது சீனியர் வீரர்கள் அதிகம் இருந்தனர் அவர்கள் ஒழுக்கத்துடனும் கண்ணியத்துடனும் என்னை நடத்தினார் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

Advertisement