இவருக்காக மட்டுமே 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்ல விரும்பினோம் – நினைவுகளை பகிர்ந்த யுவ்ராஜ் சிங்

yuvraj

இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டு இதே நாளில்தான் 28 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. மும்பையில் நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணியை அபாரமாக சேஸிங் செய்து வீழ்த்தி இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்த போட்டியில் வெற்றிக்கான இலக்கினை சிக்சர் மூலம் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் கேப்டன் தோனி. அந்த வெற்றிக்குப் பிறகு அந்த சிக்ஸரும் அதற்கு செய்யப்பட்ட வர்ணனையும் தான் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

dhoni1

இந்நிலையில் இந்திய அணி இந்த கோப்பையை வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள. இந்நிலையில் அந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வீரர்கள் அனைவரும் இந்த நாள் குறித்த தங்களது நினைவுகளை சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை குறித்த தனது நினைவினை ஒரு வீடியோ வடிவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்திய அணி வரலாறு படைத்த நாள் ஏப்ரல் 2 2011 தேசத்தின் கோப்பை கனவை சுமந்தபடி பயணித்த சச்சினுக்கும் இந்தியாவுக்கு மட்டுமே இந்த கோப்பையை வெல்ல விரும்பினோம்.

இந்திய அணிக்காக விளையாடுவதன் மூலம் தேசத்திற்கு பெருமை தேடிக் கொடுக்கவும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று யுவராஜ் ட்விட் செய்துள்ளார். மேலும் இந்திய அணியின் கனவுகளை பல வருடங்களாக சுமந்த சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணிக்கும் விதமாகவே இந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நாங்கள் விளையாடினோம். இறுதியில் வெற்றியும் பெற்று அந்த தொடரை அவருக்கு அர்ப்பணித்தது மறக்க முடியாத ஒன்று என யுவராஜ்சிங் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

sachin

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் யுவ்ராஜ் சிங் பேட்டிங்கில் 4 அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 362 ரன்களையும், பந்துவீச்சில் 15 விக்கெட்டுகளையும் சாய்த்தார். மேலும் அந்த உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.