ரோஹித் பேட்டிங் செய்வதை பார்த்தால் அப்படியே இவர் பேட்டிங் செய்வதை போலவே இருக்கு – யுவராஜ் பேட்டி

Yuvraj-Singh
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரான ரோஹித் சர்மா. இவர் கடந்த 2007ம் ஆண்டில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அப்போதிலிருந்து மிடில் ஆர்டர் மற்றும் துவக்க வீரர் என தற்போதுவரை சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறார்.

Rohith-3

- Advertisement -

துவக்க காலத்தில் ஐந்து வருடங்கள் மிடில் ஆர்டரில் விளையாடிய ரோஹித் அணிக்கு உள்ளே வெளியே என இருந்து வந்தார். அதன் பின்னர் கடந்த 8 வருடங்களாக துவம்சம் செய்து பல சாதனைகளை படைத்துள்ளார்.

தற்போது வரை 224 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 9115 ரன்கள் விளாசியுள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற உலக சாதனையை அவர் வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபகாலமாக தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாடி 4 ஆட்டத்தில் 529 ரன்கள் விளாசியுள்ளார்.

சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக விலகினார். இவ்வாறு பல சாதனைகளை படைத்து வருகிறார். இந்நிலையில் ரோஹித் சர்மா குறித்து இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியுள்ளார் :

- Advertisement -

ரோகித் சர்மாவை பார்த்தால் பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் ஹக் ஞாபகம் வருவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது : ரோஹித் சர்மா இந்தியாவிற்குள் நுழைந்த போது எனக்கு இன்சமாம் உல் ஹக் வந்ததுபோல் இருந்தது. ஏனெனில் இன்சமாம் உல் ஹக் பந்தை மிக எளிதாக ஆடுவார். ரோஹித் ஷர்மாவும் அப்படித்தான் ஆடுகிறார்.

inzamam

அவருக்கு மட்டும் பந்து மிகவும் மெதுவாக வருவது போலும், அந்த பந்தை அடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டு எளிமையாக அடிப்பதுபோலும் இருக்கும் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங். இவரின் இந்த பேட்டியை இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement