இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவருக்கு எல்லா தகுதியும் உள்ளது – யுவராஜ் சிங் ஓபன்டாக்

yuvi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், 23 வயதேயான இளம் வீரர் ஒருவர்தான் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட போகிறார் என்று கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் சர்வதேச போட்டிகளில் மிகப் பெரிய பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள இந்திய அணியை சவுரவ் கங்குலி, மஹேந்திர சிங் தோணிக்கு பிறகு மிகச் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார் விராட் கோஹ்லி. அவருக்குப் பின் இந்திய அணியை யார் வழிநடத்தப் போகிறார் என்ற கேள்வி தற்போது அனைவரிடமும் பரவலாக எழுந்த வண்ணம் உள்ளது.

IND

- Advertisement -

இந்நிலையில் யுவராஜ் சிங்கிடம் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழும் ரிஷப் பன்ட்டிற்கு எதிர்கால இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பிற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்று கூறி உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை தனது மோசமான ஆட்டத்தினால் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கும், அதிருப்திக்கும் உள்ளான ரிஷப் பன்ட், அந்த தொடரில் அற்புதமாக விளையாடி தனது திறமையை நிரூபித்துக் காட்டினார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட அவருக்கு, லிமிடெட் ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அவர், இந்திய அணியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்ததோடு மட்டுமல்லாமல் தவிர்க்க முடியாத வீரராகவும் உருவெடுத்துள்ளார். கிட்டத்தட்ட இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் சூழ்நிலைக்கு சென்று மீண்டும் தனது அபார திறமையை வெளிக்காட்டி இருக்கும் ரிஷப் பன்ட்டை புகழ்ந்து பேசியிருக்கிறார் யுவராஜ் சிங். ரிஷப் பன்ட் பற்றி பேசிய அவர் கூறியதாவது

pant

ஒரு விளையாட்டு வீரர் எப்போதும் அவருடைய விளையாட்டில் ஏற்ற இறங்கங்களை சந்தித்தே வருவார். ரிஷப் பன்ட் அதுபோல ஒரு சரிவில் இருந்து தனது கடின உழைப்பால் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இது அவரை ஒரு மிக முக்கியமான வீரராக மாற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவில் அவர் சிறப்பாக விளையாடினார் என்பதோடு மட்டுமல்லாமல் இந்திய அணியில் தனது பொறுப்பையும் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தார்.

- Advertisement -

மேலும் ஒரு கேப்டனாக எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து தெரிந்து கொண்டுள்ளார். எனவே அவர்தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து தொடரின்போது தோல் பட்டையில் காயமடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகிவிட, அந்த அணியின் கேப்டன் பொறுப்பானது ரிஷப் பன்ட்டிற்கு வழங்கப்ப்பட்டது.

ஒரு பேட்ஸ்மேனாக தன்னுடைய திறமையை நிரூபித்திருந்த அவர், கொரனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவர் தலைமையிலான டெல்லி அணியானது, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement