2011 உலககோப்பையில் எனக்கு பதிலாக இவரை அணியில் சேர்க்கவே தோனி உத்தேசமாக இருந்தார் – குண்டை தூக்கிப்போட்ட யுவ்ராஜ்

Yuvraj-Singh
- Advertisement -

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் தோனி என்னை அணியில் சேர்க்க தயங்கினார் என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் யுவராஜ் சிங். இந்திய அணி 2011 ஆம் ஆண்டில் 28 ஆண்டுகள் கழித்து உலக கோப்பை தொடரை வென்று அசத்தியது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் தோனி, யுவராஜ் சிங், ஜாகீர்கான், கௌதம் கம்பீர் போன்ற பல நட்சத்திர வீரர்கள் இருந்து கோப்பையை கைப்பற்றி கொடுத்தனர்.

Yuvraj

- Advertisement -

குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகிய இருவரின் பங்கு மிகவும் அதிகமானது. இதே தொடரில் 8 போட்டிகளில் 368 ரன்கள் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் யுவராஜ் சிங். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னர் யுவராஜ் சிங்கிற்கு அணியில் இடம் இல்லை என்பதுபோல் தோனி கூறி இருந்தார் என தற்போது யுவராஜ் சிங் கூறியுள்ளார். இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய அவர்…

உலக கோப்பை தொடருக்கு முன்னர் சுரேஷ் ரெய்னாவிற்க்கு ஆதரவு அதிகமாக இருந்தது. தோனி அவருக்கு அளவுக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வந்தார். ஒரு கேப்டனுக்கு மிகவும் பிடித்த வீரர் என்று அவருக்கு ஆதரவு கொடுத்தார் போலிருக்கிறது. நானும் யூசுப் பதானும் கூட சிறப்பாக ஆடிவந்தோம். நான் நிறைய விக்கெட்டுகள் வீழ்த்தி வந்தேன். ஆனால் சுரேஷ் ரெய்னா நன்றாக அப்போது ஆடவில்லை.

rainayoyo

அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் இல்லை. நான் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தேன். இதன் காரணமாக வேறு வழியில்லாமல் என்னை அணியில் சேர்த்துக் கொண்டனர். இவ்வாறு கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

YuvrajSingh

ஆனால் இந்த தொடரில் யுவராஜ் சிங் ருத்ர தாண்டவம் ஆடி இந்திய அணி கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ரெய்னாவும் தோனியின் தேர்வை கேள்விக்குள்ளாக்காமல் நன்றாக ஆடி அவரது பெயரைக் காப்பாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement