தோனியும் கோலியும் என்னை ஏமாற்றிவிட்டனர். இவர் மட்டுமே எனக்கு அணியில் கைகொடுத்து தாங்கினார் – யுவ்ராஜ் சிங் ஆதங்கம்

Yuvraj
- Advertisement -

இந்திய அணி 2007 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யுவராஜ்சிங். அந்த அளவிற்கு அந்த தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியவர் யுவராஜ் சிங்.

yuvraj 2

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் பல ஆண்டுகள் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் அசத்தி வந்த யுவராஜ் சிங் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு குணமாகி கடினமான பயிற்சிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை அடுத்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

Yuvraj 1

தற்போது யுவ்ராஜ் சிங் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து யுவராஜ் குறிப்பிட்டதாவது : சௌரவ் கங்குலி தலைமையில் விளையாடியது என்னால் மறக்கவே முடியாது. அவர் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அதன்பிறகு கங்குலியிடமிருந்து அணியின் தலைமை தோனியிடம் சென்றது.

- Advertisement -

இப்போது வரை யாருடைய தலைமை சிறந்தது கங்குலியா ? தோனியா ? என்று கேட்டால் அது சொல்வது மிகவும் சிரமம். ஆனால் எனக்கு கங்குலியின் தலைமைப் பண்புகள் நிறைய பிடிக்கும். மேலும் அவரது தலைமையில் ஆடிய போட்டிகள் அனைத்தும் பசுமையாக இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் என்று யுவ்ராஜ் சிங் கூறினார்.

Yuvi

மேலும் கங்குலி எனக்கு உறுதுணையாக இருந்தது போல் தோனியும் கோலியும் இல்லை. அவர்கள் இருவரிடமும் சாதகமும் பாதகமும் நிறைய இருக்கிறது என்றார். மேலும் கொரோனா குறித்து பேசுகையில் : மக்கள் படும் கஷ்டத்தை பார்த்தால் மனது உடைகிறது என்றும் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் தேவையில்லாத அச்சத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் தேவையற்ற வதந்திகளை அனைத்தையும் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Advertisement