என் கரியரில் நான் பேட்டிங் செய்ய திணறிய 2 பந்துவீச்சாளர்கள் இவர்கள்தான் – யுவ்ராஜ் சிங் ஓபன் டாக்

yuvraj
- Advertisement -

இந்திய அணியில் கங்குலியின் தலைமையில் 2000 ஆவது ஆண்டு அறிமுகமானவர் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். அதன்பின்னர் டிராவிட், கும்ப்ளே, தோனி, கோலி ஆகியோர் அணியில் விளையாடிய யுவராஜ் சிங் 2017 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். நட்சத்திர ஆல்-ரவுண்டராக ஜொலித்த இவர் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் மற்றும் 2011ம் ஆண்டு 50 வருட கோப்பை தொடர் ஆகிய இரண்டுமே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

yuvraj 2

- Advertisement -

மேலும் இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் பல கேப்டன்களில் கீழ் விளையாடியுள்ள யுவராஜ் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி க்கு பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. இதனையடுத்து கடந்த ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் தனிப்பட்ட முறையில் பெரிய சாதனைகளைப் படைக்க முடியவில்லை என்றாலும் தனது சிறப்பான பல இன்னிங்சில் மூலம் பல வெற்றிகளை இந்திய அணிக்கு இவர் பெற்றுக் கொடுத்துள்ளார். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓரங்கட்டப்பட்ட பின்னர் இவரது இடத்தை நிரப்ப இந்திய அணிக்கு 2 ஆண்டுகள் தேவைப்பட்டது.

YuvrajSingh

மிகச் சிறந்த பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் தற்போது அவரது பழைய பேட்டி ஒன்றில் தன்னுடைய கரியரில் யார் பவுலிங்கை எதிர்கொள்ள சிரமப்பட்டு உள்ளார் என்று கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் பந்துவீச்சில் அதிகமாக திணறி இருக்கிறேன்.

- Advertisement -

அவரது பௌலிங்கை எப்படி எதிர்கொள்வது என்ற ஐடியாவை எனக்கு இருந்ததில்லை. அவருடைய உடல் அசைவு எவ்வாறு இருக்கும், பந்து எந்த புறம் திரும்பும் என்று தெரியாமல் தான் திணறி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அதே போன்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் அவர்களை என்னால் ஆட முடியாது என்று கூறியுள்ளார்.

muralitharan

Glenn-McGrath

நல்லவேளையாக மெக்ராத் பந்துவீச்சை நான் அதிகம் எதிர் கொண்டது இல்லை. டெஸ்ட் போட்டிகளில் நான் அதிகமாக விளையாடியதில்லை என்பதால் அவரது பந்து வீச்சை நான் அதிகமாக எதிர்கொண்டு இல்லை. இவர்கள் இருவருமே நான் சந்தித்த கடினமான பவுலர்கள் என்று யுவராஜ் சிங் பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement