டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்காக நீ இதை செய்தாக வேண்டும் பும்ராவிற்கு அன்புக்கட்டளை விடுத்த யுவ்ராஜ் – விவரம் இதோ

Bumrah

மும்பை இந்தியன்ஸ் அணியில் அற்புதமாக ஆடியதன் மூலம் 2016 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. 2013 ஆம் ஆண்டு முதன் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் இவர். அதன் பின்னர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் மிக முக்கியமான வீரராக திகழ்ந்து வருகிறார்.

Bumrah

டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்துவிதமான போட்டிகளிலும் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சாளர் இவர்தான். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த 17 வருடங்களாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் இவர்தான் என்கிற அபாரமான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதனால் கிரிக்கெட் உலகின் முன்னணி வீரர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜஸ்பிரித் பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

Bumrah

இதனைப் பார்த்த யுவராஜ்சிங் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளார். அதில்… உங்களுடைய குறைந்த பட்ச இலக்கு 400 டெஸ்ட் விக்கெட்டுகள் ஆக இருக்கட்டும். இது குறைந்த பட்சம் தான் என்று பதிவு செய்து அன்பு கட்டளையிட்டுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

Bumrah-1

மேலும், ஒருநாள் போட்டிகளில் 64 முறை விளையாடி 104 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 50 டி20 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நான் மாதங்கள் வீட்டிலேயே சும்மா இருந்த ஜஸ்பிரித் பும்ரா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக தயாராகி வருகிறார்.