மொபைல் போன் இல்லாத காலத்தில் இதான் எங்க ஒரேவழி – த்ரோபேக் புகைப்படைத்த வெளியிட்ட யுவ்ராஜ் சிங்

Yuvi-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் யுவராஜ் சிங். சச்சின், கங்குலி, தோனி ஆகியோர்களை போன்று இவருக்கு என உலகளவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இன்றுவரை உள்ளது. அதிரடி வீரரான இவர் இந்திய அணியில் தனது இளமைக் காலத்திலேயே இடம் பெற்று நீண்ட வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். அதிலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி வெற்றி பெற்ற உலக கோப்பையில் இவரது பங்கு அசாத்தியமானது என்றால் அது மறுக்க முடியாத உண்மைதான்.

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து கிரிக்கெட் வாழ்வில் தனக்கு நடந்த அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். மேலும் தனது இக்கட்டான சூழ்நிலை குறித்தும் பகிர்ந்த அவர் தற்போது தான் இந்திய அணியின் ஆரம்ப காலங்களில் எவ்வாறு பயணித்தோம் என்பது குறித்தும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் மொபைல் போன்களே இல்லாத காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும்போது வீரர்கள் எவ்வாறு அவர்கள் குடும்பத்துடன் பேசுவார்கள் என்பது குறித்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். யுவராஜ் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கிண்டலாக பெற்றோர்கள் நமது மொபைல் பில் கட்டவில்லை என்றால் இது தான் நடக்கும் என்று நகைச்சுவையாக அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் இந்திய அணியின் வீரர்களான நெஹ்ரா, சேவாக், லட்சுமணன் ஆகியோர் வரிசையாக டெலிபோன் பூத்தில் நின்று அவர்களது குடும்பத்தாருடன் பேசுவது போன்று அமைந்துள்ளது. மேலும் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அக்காலத்தில்தான் வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் எப்படி தொடர்பில் இருந்தார்கள் என்பதும் இந்த புகைப்படத்தின் மூலம் வெளிவந்துள்ளது.

தற்போதைய நவீன காலத்தில் இவ்வளவு டெக்னாலஜி வளர்ந்துள்ள வேளையில் அக்காலத்தில் எவ்வாறு இந்திய வீரர்கள் இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement