என்னை பொறுத்தவரை இந்திய அணியின் அடுத்த கேப்டன் அவர்தான் – யுவராஜ் குறிப்பிட்ட அந்த வீரர் யார் தெரியுமா ?

Yuvi
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி படு மோசமான தோல்வியை சந்திக்க வைத்தது நியூசிலாந்து அணி. அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இந்நிலையில் இந்த தோல்வியை அடுத்து இந்திய அணி பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் அது மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருக்க கூடாது என்றும் ஒரு சில பார்மெட்களில் கோலியை தாண்டி மற்ற வீரர்களை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது சமூக வலைத்தளத்தில் வலுவாக எழுந்து வருகிறது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி தற்போது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரிலும் ஒருவேளை இந்திய அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியில் கேப்டன் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக விராட் கோலியை தொடர்ந்து யார் வருவார்கள் என்ற கேள்வி தற்போது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஒரு கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்ட் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : பண்ட் மிகச்சிறந்த வீரர் அவருடைய திறமை தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்பட்டு வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் கூட அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் முடிவை மாற்றும் அளவிற்கு சிறப்பாக விளையாடி வருகிறார்.

pant 1

பேட்டிங்கில் மட்டுமின்றி போட்டி முழுவதுமே அவர் நல்ல ஒரு திறனுடன் செயலாற்றி வருகிறார். மேலும் அவர் கேப்டனாக அணியை வழிநடத்தும் திறமை உள்ளவராக நான் கருதுகிறேன். இதனால் நிச்சயம் விரைவில் தொடர்ந்து அவரே இந்திய அணியின் கேப்டனாக வருவார் என்று தான் நினைப்பதாக யுவ்ராஜ் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் விலகியதால் அவருக்கு டெல்லி அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணி ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நடப்பு ஐபிஎல் தொடரிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் எஞ்சியுள்ள 31 போட்டிகள் செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் வேளையில் அவர் கேப்டனாக செயல்படுவாரா ? இல்லையா ? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

Advertisement